சென்னை மேயர் பெயரில் வாட்ஸ் அப் மெசேஜ்… நூதன முறையில் மர்ம நபர்கள் பண மோசடி!!

Published : Jul 13, 2022, 08:00 PM ISTUpdated : Jul 13, 2022, 08:03 PM IST
சென்னை மேயர் பெயரில் வாட்ஸ் அப் மெசேஜ்… நூதன முறையில் மர்ம நபர்கள் பண மோசடி!!

சுருக்கம்

சென்னை மேயரின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் புரோபைல் ஃபோட்டாவாக வைத்து பண மோடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மேயரின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் புரோபைல் ஃபோட்டாவாக வைத்து பண மோடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அண்மைகாலமாக தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தை பயன்படுத்தி பல மோசடிகள் அறங்கேறி வருகின்றன. சமீபத்தில் காவல்துறையினர் பெயரில் டிவிட்டரில் மோசடி நடைபெற்றது. அது போல தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைனில் கஞ்சா விற்பனை… வசமாக சிக்கிய 3 கல்லூரி மாணவர்கள்… அடுத்து நிகழ்ந்தது என்ன?

இந்த மோசடியில் ஈடுபடும் மர்ம நபர்கள் நண்பர்கள், உறவினர் புகைப்படங்கள், பிரபலங்களின் புகைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை மேயர் பிரியாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சென்னை மண்டல அதிகாரிகளிடம் அமேசான் கிஃப்ட் கார்டை மர்ம நபர்கள் கேட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முகநூலில் காதல்.. காதலியை தேடி சென்றவருக்கு ஏற்பட்ட விபரீதம்.. காதலர்களே உஷார்!

மேயர் பிரியா அனுப்பியது போன்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி மூன்று பேரிடம் மோசடி செய்ய முயற்சி செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சந்தேகம் அடைந்த அதிகாரிகள் உஷார் ஆகினர். மேலும் இதுதொடர்பாக சென்னை மேயர் பிரியாவின் தரப்பில் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்தப் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!