மோடி பிரதமர் ஆகவே முடியாது...! மோகன் சி லாசரஸின் 3 மாத அதிர்ச்சி பிரார்த்தனை...!

By Thiraviaraj RMFirst Published Sep 9, 2019, 6:05 PM IST
Highlights

நாங்கள் செய்யும் பிரார்த்தனையால் நிச்சயமாக மோடி பிரதமர் ஆக முடியாது. அப்படி அவர் பிரதமரானால் இயேசுவை ஆரதிப்பதை அன்றோடு விட்டுவிடுவேன் என கிறிஸ்தவ மத போதகர் தெரிவித்த தகவல் இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  

நாங்கள் செய்யும் பிரார்த்தனையால் நிச்சயமாக மோடி பிரதமர் ஆக முடியாது. அப்படி அவர் பிரதமரானால் இயேசுவை ஆரதிப்பதை அன்றோடு விட்டுவிடுவேன் என கிறிஸ்தவ மத போதகர் தெரிவித்த தகவல் இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மோகன் சி.லாசரஸ். பிரபலமான கிறிஸ்தவ மத போதகரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் "இந்துக்கடவுள்கள் சாத்தான்கள், இந்து ஆலயங்கள் சாத்தான்களின் அரண்கள். இந்தியாவிலேயே அதிகமாக சாத்தான்களின் அரண்கள் உள்ள இடம் தமிழகம்தான்’’ என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்துமத கோவில்களையும் இழிவாகவும் தரக்குறைவாகவும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பேசி வரும் மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு மோகன் சி லாசரஸை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனது தரப்பு விளக்கத்தை வாட்ஸ் அப் வீடியோவில்  அளித்திருந்தார். 

அதில் "இந்து தெய்வங்களை பற்றியோ, மதத்தை பற்றியோ நான் இழிவுப்படுத்தி பேசவில்லை. சர்ச்சைக்குரிய அந்த காட்சி எப்பொழுது பேசியது என அதில் கூறப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் இப்படியெல்லாம் நான் பேசியதே இல்லை. சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் "இந்தியாவின் நம்பிக்கை, வேதம்" என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய காட்சிதான் அது. இழிவுபடுத்தவே இல்லை. ஆனால் அதில் உள்ள சில வார்த்தைகளை மட்டும் வைத்து திரித்து வெளியிடப்பட்டுள்ளது. எனது உடன் பிறந்த சகோதரர்களும் இந்து மதத்தில்தான் உள்ளனர். அவர்களிடம் கூட இதுவரை நான் தவறுதலாக பேசியதில்லை. என்னிடம் ஏராளமான இந்து மதத்தினர் பிரார்த்தனைக்காக வருகின்றனர். எனவே இந்து மதத்தை நான் இழிவுபடுத்தி பேசவில்லை" எனத் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் அச்சு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மூன்று ஆண்டுகளாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறோம். ஆகவே சொல்கிறோம் மோடி பிரதமாரக முடியாது. அப்படி பிரதமரானால் இயேசுவை ஆராதிப்பதை அன்றோடு விட்டு விடுவேன்’’ எனத் தெரிவித்து இருந்தார். 

ஆனால், அவர் பிரார்த்தித்தற்கு நேர்மாறாக மோடி இரண்டாவது முறையும் பிரதமராகி இருக்கிறார். இந்த செய்தியை பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். 
 

click me!