மொபைல் ரீசாஜ் செய்ய பணம் கொடுக்க மறுத்த தந்தை... துண்டு துண்டாக்கி கொன்ற மகன்..!

By vinoth kumarFirst Published Sep 9, 2019, 2:21 PM IST
Highlights

செல்போன் ரீசாஜ் செய்ய பணம் தராத தந்தையை, மகன் துண்டுதுண்டாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக
அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

செல்போன் ரீசாஜ் செய்ய பணம் தராத தந்தையை, மகன் துண்டுதுண்டாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக
அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்திலுள்ள, காகத்தி தாலுகாவில் வசித்து வருபவர் சங்கரப்பா (59). இவருக்கு ரகுவீர்குமார் (21) என்ற மகன் உள்ளார். ரகுவீர் மொபைல் விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். அதிலும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து, அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பப்ஜி எனும் விளையாட்டை நாள் முழுவதும் விளையாடிக் கொண்டிருப்பதாகத் கூறப்படுகிறது. 

இதனால், கடும் கோபமடைந்த தந்தை பப்ஜி விளையாட்டை விளையாடக்கூடாது என கடுமையாக கண்டித்துள்ளார். இதனையடுத்து, தந்தை மற்றும் மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், மொபைலில் இருந்த இணைய வசதி கலாவதியாகிவிட்டது. இதனால், பப்ஜி விளையாட்டை விளையாட, தந்தையிடம் சென்று பணம் கேட்டுள்ளார். 

ஆனால், சங்கரப்பா பணம் தர முடியாது என்று சொல்ல, இருவருக்கிடையிலும் வாய்த்தகராறு ஏற்பட்டு, முடிவில் அடிதடியாக மாறியுள்ளது. இதில் கோபமடைந்த ரகுவீர், வீட்டு சமையலறையிலிருந்த அரிவாளை எடுத்து தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும், ஆத்திரம் தீராததால் தலையையும், ஒரு காலையும் துண்டாக வெட்டி எடுத்துள்ளார். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சங்கரப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரகுவீர்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பப்ஜி விளையாட்டால் சொந்த மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!