Latest Videos

தலைநகரை அலறவிட காத்திருந்த கூலிப்படை கும்பல்! ஒரே நேரத்தில் 3 பேருக்கு ஸ்கெட்ச்! துப்பாக்கி முனையில் கைது!

By vinoth kumarFirst Published Jun 16, 2024, 8:37 AM IST
Highlights

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான கூலிப் படைத்தலைவன் ராதாவின் நெருகிய கூட்டாளிகள் 3 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டி இருப்பதாக சென்னை வடக்கு மண்டல அதிதீவிர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

சென்னையில் வழக்கறிஞர் உள்பட 3 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டிய கூலிப்படை தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான கூலிப் படைத்தலைவன் ராதாவின் நெருகிய கூட்டாளிகள் 3 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டி இருப்பதாக சென்னை வடக்கு மண்டல அதிதீவிர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அரும்பாக்கம் பகுதியில் பாழடைந்த பழைய கட்டடத்தில் பதுங்கி கும்பலை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் 12 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 பட்டா கத்திகள், 12 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நெருக்கம்.. 15 வயது சிறுவனால் சிறுமி 5 மாதம் கர்ப்பம்!

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சூளைமேடைச் சேர்ந்த மெரிலின் விஜய் (39), கே.கே.நகரை சேர்ந்த மணிகண்டன் (34), அமைந்தகரை பகுதியை சேர்ந்த ஜிவான் (27), நீலாங்கரையை சேர்ந்த அஜித்குமார் (25), சாலிகிராமத்தை சேர்ந்த சுரேந்திரன் (34), சதீஷ்குமார் (30), சமீம் பாஷா (29) சரவண பெருமாள் (30), மடிப்பாக்கத்தை சேர்ந்த மகேஷ் (44), அரும்பாக்கத்தை சேர்ந்த அப்துல் (24), வியாசர்பாடியை சேர்ந்த மதன்குமார் (36), ஆகியோர் என தெரியவந்தது. இதில், சலீம் பாட்ஷா மற்றும் சமீம் ஆகியோர் கடந்த 2022ல் எர்ணாவூரில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி உமர் பாட்ஷாவின் உறவினர்கள்.

இதையும் படிங்க:  டாக்டர் சுப்பையா கொலை! CCTV ஆதாரம் இருந்தும் 9 குற்றவாளிகள் விடுதலையானது எப்படி? போலீஸ் எங்கு கோட்டை விட்டது?

முதற்கட்ட விசாரணையில், இவர்கள் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர், ரவுடி ஒருவரின் கூட்டாளி உள்ளிட்ட 3 பேரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது தெரிந்தது. அரும்பாக்கம் ராதாவின் கூட்டாளியும் பிரபல ரவுடியுமான உமர் பாட்ஷாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 22ம் தேதி வர உள்ளது. அதற்குள் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற இலக்குடன் ரவுடி கும்பல் திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதனையடுத்து 12 ரவுடிகளையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னை நடைபெற இருந்த 3 கொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

click me!