நீ எனக்கு 7வது ஆளு போடா... மிரள வைக்கும் இளம்பெண்ணின் பதில்.. உடந்தையாக இருந்த தாய்.. ஆடிப்போன கணவர்...!

Published : Feb 18, 2021, 06:50 PM IST
நீ எனக்கு 7வது ஆளு போடா...  மிரள வைக்கும் இளம்பெண்ணின் பதில்.. உடந்தையாக இருந்த தாய்.. ஆடிப்போன கணவர்...!

சுருக்கம்

முகநூல் மூலம் அறிமுகமாகி காதல் திருமணம் செய்து  7 ஆண்களை ஏமாற்றி பெண் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

முகநூல் மூலம் அறிமுகமாகி காதல் திருமணம் செய்து  7 ஆண்களை ஏமாற்றி பெண் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை சேர்ந்த பாலகுரு என்பவர் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரையிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண் முகநூலில் என்னோடு அறிமுகம் ஆனார். 6 மாதங்கள் எங்களுக்குள் தொடர்ந்த இந்த நட்பு காதலாகி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். அதன்பின்னர், சிவப்பிரியா நகர், வள்ளாலகரம் பகுதியில் தனிக்குடித்தனம் வைத்து குடும்பம் நடத்தினேன். நான் ஓட்டுநராக இருப்பதால் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவேன். நான் வீட்டில் இல்லாத  நேரத்தில் ரஜபுநிஷா பேஸ்புக், டிக்டாக்கிற்காக தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்தார். 

குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த பார்த்திபனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், நான் இல்லாத நேரத்தில் பார்த்திபனை வரவழைத்து உல்லாசமாக இருந்ததும் தெரிந்தது. இதனை அறிந்த நான் அந்த பெண்ணை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரஜபுநிஷாநான் உன்னை மட்டும் திருமணம் செய்துகொள்ளவில்லை, பணத்திற்காக 7 ஆண்களை திருமணம் செய்துள்ளேன். சில தினங்களுக்கு முன்பு கூட திண்டுக்கல்லை சேர்ந்த பார்த்திபன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும், மேலும், எங்கள் வாழ்க்கையில் தலையீட்டால் பார்த்திபனுடன் சேர்ந்து உன்னை கொலை செய்து விடுவேன்” எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து செய்வதறியாது திகைத்துப்போன பாலகுரு வேலைக்கு சென்று விட்டு வீட்டில் வந்து பார்த்த போது  70,000 ரூபாய் பணத்தையும் ஒரு பவுன் தங்கச் சங்கிலியையும் திருடிக்கொண்டு ரஜபுநிஷா வீட்டை விட்டு சென்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து ரஜபுநிஷாவின் அம்மாவிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாலகுரு பேசியுள்ளார். அப்போது “எனது மகள் என்னுடைய ஆலோசனைப்படியே 7 பேரையும் திருமணம் செய்துள்ளதாக” கூறியுள்ளார் ரஜபுநிஷாவின் தாயார். மேலும், “நீ இந்த விஷயங்களில் இருந்து ஒதுங்கிக்கொள், இல்லை எனில் உன்னை கொலை செய்து விடுவோம்” எனவும் பால குருவை மிரட்டியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ந்து போன பாலகுரு, தன்னிடம் நடித்து பொய்யாக திருமணம் செய்து ஏமாற்றிய ரஜபுநிஷா மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தன் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!