லாட்ஜில் ரூம் போட்டு கள்ளக்காதல் ஜோடி விடிய விடிய உல்லாசம்... இறுதியில் நேர்ந்த சோகம்..!

Published : Feb 18, 2021, 05:57 PM IST
லாட்ஜில் ரூம் போட்டு கள்ளக்காதல் ஜோடி விடிய விடிய உல்லாசம்... இறுதியில் நேர்ந்த சோகம்..!

சுருக்கம்

கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கள்ளக்காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கள்ளக்காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மேலகரிசல்குளத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (51) கூலித்தொழிலாளி. திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். ராயகிரியை சேர்ந்தவர் கணேசனின் மனைவி மாலா (35) இவருக்கும் குழந்தைகள் உள்ளனர். வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் உல்லாசமாக இருப்பதற்காக லாட்ஜில் அடிக்கடி தங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் தங்கினர். நேற்று காலை அறை வெகு நேரமாகியும் ரூம் திறக்கப்படாததால் ஊழியர்கள் சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாலா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அந்தோணிராஜின் கழுத்தும் அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு, சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இரவில் வாக்குவாதம் ஏற்பட்டதால், மாலாவை கொலை செய்த அந்தோணிராஜ், தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கணவர் கண் முன்னே கதறிய பெண்.. விடாமல் கூட்டாக சேர்ந்து குதறிய சிறுவர்கள் உட்பட 3 பேர்
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?