
விருதுநகரில் திமுக பிரமுகரின் மகன் அடுத்தவரின் மனைவியை கட்டிப்பிடித்து உல்லாசம் அனுபவிக்க முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமைச்சர்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில் அக்கட்சியின் அரசியல் வாரிசுகளின் அட்ராசிட்டிகள் பொது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது, அவற்றை மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர், அதேநேரத்தில் எதிர்க்கட்சியான அதிமுக பாஜக, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதே நேரத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பொது இடங்களில் சர்ச்சைக்குரிய வகைகளில் செயல்பட்டு கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது அரசுக்கு பெரும் தலைவலியாகவே மாறியுள்ளது.
ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை சமாளிக்க முடியாமல் திமுக அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது, இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் செய்யும் எல்லை மீறிய அட்ராசிட்டிகளால் பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு தலைகுனிவு ஏற்பட்டுவருகிறது என்றே சொல்லலாம் இந்த வரிசையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகரின் வாரிசு திருமணமான பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையும் படியுங்கள்: 45 அதி நவீன கைத்துப்பாக்கிகளுடன் சிக்கிய கணவன் மனைவி.. டெல்லி விமான நிலையத்தில் பயங்கர சம்பவம்.
விவரம் பின்வருமாறு: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கரை முருகன், இவர் கட்டிட தொழிலாளியான இருந்து வருகிறார். இவரின் மனைவி சண்முகவள்ளி, இவர் 100 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 26ஆம் தேதி கால்நடைகளை வயலுக்கு ஓட்டிச் சென்ற அவர், அவைகளை மேய்த்துவிட்டு மாலையில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த திமுகவை சேர்ந்தவரின் மகன் அரிகிருஷ்ணன் என்பவர் பின் தொடர்ந்து வந்து சண்முக வள்ளியை பின்னால் இருந்து கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதையும் படியுங்கள்: 16 வயது சிறுமி கர்ப்பம்.. எஸ்கேப் ஆன காதல் ஜோடிகள்.! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
திடீரென ஆண் ஒருவர் தன்னை கட்டி பிடித்ததால் அந்தப்பெண் அலறியடித்து ஓடினார், அதற்குள் அரிகிருஷ்ணன் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மாயமானார், சிறிது நேரத்தில் சண்முகவள்ளியின் வீட்டுக்கு வந்த ஹரி கிருஷ்ணனின் தாய் பாண்டியம்மாள் அவரை மிகவும் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது, இதனால் ஹரி கிருஷ்ணன் மற்றும் அவரது தாயார் மீது சண்முகவள்ளி நரிகுடி காவல் நிலையத்தில் கற்பழிப்பு முயற்சி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இந்த வழக்கில் இதுவரை அரிகிருஷ்ணன் அல்லது அவரது தாயார் கைது செய்யப்படவில்லை, இந்நிலையில் தனக்குள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அரிகிருஷ்ணனின் தாயார் சண்முகவள்ளியை தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு பயந்து சண்முகவள்ளி தனது தாய் வீட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு வார காலமாக தன் மகன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற சொல்லி திமுக நிர்வாகிகள் சண்முகவள்ளியை வற்புறுத்திவருவதாக தெரிகிறது.
ஏற்கனவே கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்கி வருவதாகும், இதற்கிடையில் தன் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி போலீசிலும் தான் வலியுறுத்தி உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சண்முகவள்ளி கூறியுள்ளார். ஹரி கிருஷ்ணனின் தந்தை திமுகவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக அவர் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். போலீஸ் நடவடிக்கை எடுக்குமா.???