
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகளுடன் வந்த தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் துப்பாக்கிகள் உண்மையானவையா? இல்லையா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது, மேலும் அந்தத் துப்பாக்கிகளின் தன்மை குறித்து தேசிய பாதுகாப்புப்படை என்.எஸ்.ஜி மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அதில் அத்துப்பாக்கிகள் அனைத்தும் உண்மையானவை எனபது அவர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கிகள் நல்ல செயல் திறனுடன் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்: சென்னை மேயர் பெயரில் வாட்ஸ் அப் மெசேஜ்… நூதன முறையில் மர்ம நபர்கள் பண மோசடி!!
பல்வேறு நாடுகளில் இருந்து சட்டத்திற்குப் புறம்பாக பணம், நகைகள், துப்பாக்கிகள் போன்ற பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் கண்கொத்தி பாம்பாக இருந்தது அவற்றை விமான நிலையங்களில் கண்டறிந்து கைப்பற்றி வருகின்றனர். இந்த வரிசையில் தம்பதி இருவர் அதிநவீன துப்பாக்கிகளை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 2 டிராலி சூட்கேஸ்கள் உடன் வந்த தம்பதியரை போலீசார் சோதனை செய்தனர், அப்போது அவர்களது சூட்கேசில் 45 அதிநவீன கைத்துப்பாக்கிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பதும் தெரியவந்தது.
இதையும் படியுங்கள்: முகநூலில் காதல்.. காதலியை தேடி சென்றவருக்கு ஏற்பட்ட விபரீதம்.. காதலர்களே உஷார்!
ஜூலை 10 ஆம் தேதி வியட்நாமின் ஹோசிமின் நகரிலிருந்து இந்தியா திரும்பியபோது அவர்கள் பிடிபட்டனர். பிடிபட்டவர் ஜக்ஜித் சிங் என்பதும், அவரது சகோதரர் இந்த டிராலி சூட்கேசை அவரிடம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. பிரான்சின் பாரிஸிலிருந்து வியட்நாமின் தரையிறங்கிய பின்னர் ஜக்ஜித் சிங்கிடம் அவரது சகோதரர் மஞ்சித் சிங் இந்த சூட்கேசை ஒப்படைத்ததாகவும்,அந்த சூட்கேசை அவர் டெல்லிக்கு கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. மற்றும் அவரது மனைவி துப்பாக்கி இருந்த டிராலி பேக்கில் சில அடையாளங்களை அகற்றி கடத்தலுக்கு உதவியுள்ளார்.
அந்தப் பைகளை ஆய்வு செய்ததில் அதில் தோராயமாக 22.50 லட்சம் மதிப்புள்ள 45 வகையான பல பிராண்ட் துப்பாக்கிகள் இருந்துள்ளன. அதில் துருக்கி நாட்டைச் சேர்ந்த 25 துப்பாக்கிகள் இடம்பெற்றுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணை இறுதியில் இத் துப்பாக்கிகளையும் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வந்ததையும் தம்பதியர் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.