திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் கடந்த 5-ம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவர், பெற்றோரிடம் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
திருச்சி துறையூர் பகுதியில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவரை திருமணம் செய்த அதே பள்ளியைச் சேர்ந்த 26 வயது ஆசிரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
பள்ளி மாணவனுடன் ஆசிரியர் ஓட்டம்
undefined
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் கடந்த 5-ம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவர், பெற்றோரிடம் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தஞ்சை பெரிய கோவிலில் திருமணம்
முதற்கட்ட விசாரணையிலேயே மாணவன் படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த சர்மிளா (26) என்பரும் அதேநாளில் மாயமாகி இருப்பது தெரியவந்தது. போலீசாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து காணாமல் போன மாணவருடன், ஆசிரியை சர்மிளாவும் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்தவகையில், ஆசிரியை சர்மிளாவின் செல்போன் நம்பரை போலீசார் டிரேஸ் செய்து கண்காணித்து வந்த போது வேளாங்கண்ணி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி என மாறிக்கொண்டே வந்து கடைசியில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இருப்பதாகக் காட்டியிருக்கிறது. எடமலைப்பட்டி புதூரில் உள்ள தோழி ஒருவருடைய வீட்டில் ஆசிரியை சர்மிளாவும், மாயமான அந்த மாணவரும் தங்கியிருப்பதை கடைசியில் போலீசார் உறுதி செய்தனர்.
போக்சோ சட்டத்தில் கைது
இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆசிரியை சர்மிளா மற்றும் அந்த மாணவரை துறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், இருவரும் தஞ்சை பெரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சர்மிளா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகிளாநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.