சிகரெட் வாங்க காசு கொடுக்க மறுத்தவரை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரர்கள்.. அலேக்கா தூக்கிய போலீஸ்..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Jun 08, 2022, 12:48 PM IST
சிகரெட் வாங்க காசு கொடுக்க மறுத்தவரை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரர்கள்.. அலேக்கா தூக்கிய போலீஸ்..!

சுருக்கம்

காசு தர முடியாது என்று விஜய் கூறி இருக்கிறார். இந்த விவகாரத்தில் விஜய் மற்றும் சோனு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.   

மத்திய டெல்லியை அடுத்த ஆனந்த் பிரபாத் பகுதியை சேர்ந்த நபரை ஒரு கும்பல் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பத்து ரூபாய் சிகரெட் குறித்து ஏற்பட்ட மோதல் கொலை சம்பவமாக நிறைவு பெற்று இருக்கிறது. விஜய் என்ற வாலிபரை ரவி, ஜதின், சோனு குமார் மற்றும் அஜய் கூட்டு சேர்ந்து கொலை செய்துள்ளனர். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கொலை ஜூன் 6 ஆம் தேதி நிகழ்ந்து இருக்கிறது. கொலை குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். உயிரிழந்தவரின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, தடயவியல் சோதனை நடத்தப்பட்டது.

விசாரணை:

“சி.சி.டி.வி. கேமரா மற்றும் இன்ஃபார்மர்களின் உதவியோடு, குற்றவாளிகளான ரவி, ஜதின், சோனு குமார் மற்றும் அஜய் கைது செய்யப்பட்டனர்,” என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சிகரெட் தொடர்பாக ஜூன் 5 ஆம் தேதி எழுந்த வாக்குவதாதத்தை அடுத்து விஜய் கொல்லப்பட்டார் என கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்து உள்ளனர் என்று காவல் துறை துணை ஆணையர் ஸ்வேதா சவுகான் தெரிவித்தார். 

“சம்பவம் நடந்த தினத்தில் சோனு கொல்லப்பட்ட விஜயிடம் சிகரெட் வாங்க பத்து ரூபாய் வழங்குமாறு கேட்டு இருக்கிறார். காசு தர முடியாது என்று விஜய் கூறி இருக்கிறார். இந்த விவகாரத்தில் விஜய் மற்றும் சோனு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. வாக்குவாதம் சண்டையாக மாறி கொலையாக முடிந்து இருக்கிறது,” என காவல் துறை தெரிவித்து உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!