திருநெல்வேலியில் பயங்கரம்..! தாயை கொடூரமாக கொன்று பிணத்துடன் வீட்டில் 2 நாட்கள் இருந்த மகன்..!

Published : Feb 07, 2020, 12:59 PM ISTUpdated : Feb 07, 2020, 01:03 PM IST
திருநெல்வேலியில் பயங்கரம்..! தாயை கொடூரமாக கொன்று பிணத்துடன் வீட்டில் 2 நாட்கள் இருந்த மகன்..!

சுருக்கம்

அகிலன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் அக்கம்பக்கத்தினர் வீட்டை எட்டிப்பார்த்ததில் விமலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகே இரும்பு தம்பியுடன் அகிலன் அமர்ந்திருந்தார். 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் வானாமலை. இவரது மனைவி விமலா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் மூன்று மகன்களும் உள்ளனர். ரயில்வேயில் வேலைபார்த்து வந்த வானாமலை பணியில் இருக்கும் போதே மரணமடைந்து விட்டதால் கருணை அடிப்படையில் மூத்த மகன் அகிலனுக்கு அந்த பணி வழங்கப்பட்டது. அவர் தற்போது விருதுநகரில் பணியாற்றி வருகிறார்.

அகிலனுக்கு அவ்வப்போது மனநிலை பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் 4 முறை திருமணம் நடந்தும் விவாகரத்து ஆகிவிடவே தாய் விமலாவுடன் விருதுநகரில் அகிலன் வசித்து வந்தார். பாளையங்கோட்டையில் சொந்தமாக 4 வீடுகள் இவர்களுக்கு இருக்கும் நிலையில் அனைத்தும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை அகிலனும் விமலாவும் பாளையங்கோட்டை வந்து வாடகையை வசூலித்து செல்வர். அதன்படி இந்த மாதமும் வாடகை பெற பாளையங்கோட்டை வந்த அவர்கள் வீட்டில் தங்கியிருந்தனர்.

இந்தநிலையில் அகிலன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் அக்கம்பக்கத்தினர் வீட்டை எட்டிப்பார்த்ததில் விமலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகே இரும்பு கம்பியுடன் அகிலன் அமர்ந்திருந்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள், விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். அகிலனை பிடித்து விசாரித்ததில் இரண்டு நாட்களுக்கு முன்பே தாயை அடித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மனநலம் பாதித்ததாக கூறப்படும் மகன் பெற்ற தாயை கொன்று இரண்டு நாட்கள் பிணத்துடன் வீட்டிற்குள் இருந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி..! சரக்கு விலை தாறுமாறு உயர்வு..! இன்று அமலாகிறது..!

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!