2-ஆவது மனைவியை கொன்று 3-வது திருமணம் செய்து கொண்ட நபர் கைது... போலீஸ் அதிரடி..!

By Kevin KaarkiFirst Published May 25, 2022, 9:59 AM IST
Highlights

முந்தைய தாக்குதலில் தப்பித்துக் கொண்ட மாமியரை கொலை செய்து போலீசில் சரண் அடைய திட்டமிட்டு இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்.

ஏழு மாதங்கள் கருவுற்று இருந்த மனைவி மற்றும் ஏழு வயது மகனை எட்டு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 45 வயது நபர், முந்தைய தாக்குதலில் தப்பித்துக் கொண்ட மாமியரை கொலை செய்து போலீசில் சரண் அடைய திட்டமிட்டு இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். கைது செய்யப்பட்ட நபர் சூலூர்பேட்டை அருகே தலைமறைவாகி இருந்தார்.

45 வயதான கே ராஜு  ஆந்திர பிரதேச மாநிலத்தின் மன்னார் போலுர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் சென்னை வண்ணாரப்பேட்டையை அடுத்த வ.உ.சி. நகரில் வசிந்து வந்தார். கட்டிட தொழிலாளியான இவர், தனது முதல் மனைவியை 2014 ஆண்டு வாக்கில் பிரிந்து. எம் குனசுந்தரி என்பவரோடு பழகி வந்தார். இவர் அதே பகுதியில் வசித்து  வந்த விதவை பெண் ஆவார். 

திருமணம்:

குனசுந்தரிக்கு ஏழு வயதில் மகேஷ் குமார் என்ற மகன் இருந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2014 நவம்பர் மாத வாக்கில் குனசுந்தரி ஐந்து மாதங்கள் கருவுற்று இருந்தார். அப்போது குனசுந்தரி மற்றும் கே ராஜு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது, ராஜு தனது மாமியார், மனைவி மற்றும் மகனை கத்தியால் குத்தினார். 

இதில் குனசுந்தரி மற்றும் மகன் மகேஷ் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில், மாமியார் மட்டும் உயிர் பிழைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தாக்குதலுக்கு பின் தலைமறைவாகி போன ராஜூவை பிடிக்க தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த வகையில், ராஜூவின் உறவினர்கள் ஆந்திர பிரதேச மாநிலத்தின் சூலூர்பேட்டை அருகே வசித்து வருவதை போலீசார் கண்டுபிடித்தனர்.

தேடுதல் வேட்டை:

“சென்னையில் ராஜூ கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அந்த வகையில் இவர் ஆந்திர பிரதேச மாநிலத்தின் சூலூர்பேட்டையிலும் இதே பணியை மேற்கொள்வார் என நினைத்தோம். இதற்காக பல்வேறு கட்டிட தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினோம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இருவேறு நோட்டீஸ்களை கட்டிட தொழிலாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அனுப்பினோம். இதே தகவலை உள்ளூர் போலீஸ் குழுக்களுக்கும் வழங்கப்பட்டது,” என மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். 

வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்ட தகவலை அடுத்து, ராஜூவின் கீழ் வேலை பார்த்து வந்த மூன்று பேர் போலீசாரை தொடர்பு கொண்டு, அவர் எங்கு இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். இதை அடுத்து சூலூர்பேட்டையை அடுத்த சத்யவேடு என்ற பகுதியில் வைத்து போலீசார் ராஜூவை பிடித்தனர். கைது செய்யப்பட்ட ராஜூ அதே பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணை திருமணம் செய்து வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

click me!