பொதுமக்கள் மத்தியில் பாஜக பிரமுகர் கொடூர கொலை.. இந்த 3 ரவுடிகளுக்குதான் தொடர்பு? வெளியான அதிர்ச்சி தகவல்.!

Published : May 25, 2022, 09:24 AM ISTUpdated : May 25, 2022, 09:27 AM IST
பொதுமக்கள் மத்தியில் பாஜக பிரமுகர் கொடூர கொலை.. இந்த 3 ரவுடிகளுக்குதான் தொடர்பு? வெளியான அதிர்ச்சி தகவல்.!

சுருக்கம்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள 3 ரவுடிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள 3 ரவுடிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை சிந்தாரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பாலசந்தர் (30). இவர், மத்திய சென்னை பாஜக எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். இவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தமிழக காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், பாலசந்தர் தன்னுடைய பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ணன் என்பவருடன்  சாமிநாயக்கன் தெரு, நித்யா ஹார்டுவேர்ஸ் அருகே நின்று தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அருகே உள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றிருந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டாக்கத்தி மற்றும் அரிவாளுடன் கண் இமைக்கும் நேரத்தில் பாலசந்தரனை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலசந்தர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த பாலகிருஷ்ணன் ஓடி வருவதற்குள் கொலை செய்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியது. 

பொதுமக்கள் நிறைந்த பகுதியில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனிடையே, பாலச்சந்தரின் சகோதரி ஷர்மிளா அளித்த புகாரின் பேரில் ரவுடிகளான பிரதீப், சகோதரர் சஞ்சய், மற்றொரு ரவுடி கலைவாணன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 ரவுடிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு