திருச்சி மாவட்டத்தில் சாலையோரம் படுத்து உறங்க இடம் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், உய்யக்கொண்டான் திருமலை லூர்து பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் சித்திரை இவரது மகன் கந்தசாமி (வயது 58). இவர் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி இரவு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று விட்டு கீழ உத்தர வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் படுத்திருந்தார். அப்போது ஈரோடு மாவட்டம், காசிபாளையம் கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த சோலையப்பன் என்பவரது மகன் முருகேசன் (40) அங்கே வந்துள்ளார்.
தான் படுத்து உறங்கும் இடத்தில் கந்தசாமி படுத்திருப்பதைக் கண்டு அவருடன் வாக்குவாதம் செய்துள்ளா. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகேசன் அங்கு கடந்த கல்லை எடுத்து கந்தசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கந்தசாமி படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
திண்டுக்கல்லில் பட்ட பகலில் அடுத்தடுத்து 2 பேர் வெட்டி படுகொலை; காவல் துறை விசாரணை
தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல் துறையினர் முருகேசனை கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிபதி செல்வமுத்துக்குமாரி முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 500 ரூபாய் அபராதம் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கணவருடன் சேர்த்து வையுங்கள்; காவல் நிலையம் அருகே தற்கொலைக்கு முயன்ற திருநங்கையால் பரபரப்பு
இதனைத் தொடர்ந்து முருகேசனை காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று துவாக்குடி பகுதி சேர்ந்த சப்பானி என்பவர் எட்டு கொலைகள் செய்த வழக்கில் ஆயுள் தண்டனையும், முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும் என ஒரே நாளில் இரண்டு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.