திண்டுக்கல்லில் பட்ட பகலில் அடுத்தடுத்து 2 பேர் வெட்டி படுகொலை; காவல் துறை விசாரணை

By Velmurugan s  |  First Published Aug 8, 2023, 11:15 AM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் பகல் நேரத்தில் 2 பேர் அடுத்தடுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் பொன்மான்துறை புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ராசு என்ற இருளப்பன் (வயது 40). கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆன நிலையில் 2வது மகள் 12ம் வகுப்பும், ஒரு மகன் தொழிற்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  இருளப்பன் பொன் மாந்தரை புதுப்பட்டியில் புதிதாக வீடு விலைக்கு வாங்கி அதில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று இருளப்பன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் மதியம் உணவு அருந்திவிட்டு கணவன், மனைவி இரண்டு பேரும் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 6 பேர் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த இருளப்பனை சரமாரியாக வெட்டியுள்ளனர். 

Latest Videos

வனத்துறையினர் துரத்தியபோது கீழே விழுந்து ஒருவர் பலி; சோதனை சாவடிக்கு தீ வைத்ததால் பரபரப்பு

இதில் சம்பவ இடத்திலேயே இருளப்பன் பரிதாபமாக உயிர் இழந்தார். இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் நிலம் வாங்கியது தொடர்பாக இருளப்பனுக்கும், மற்றொரு நபருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளதாகவும், அதன் காரணமாக இந்த கொலை நடந்து உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இதே போன்று திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த அருளானந்தபாபு(29) திருமணம் ஆகவில்லை. இவர் கறிக்கடையில்  வேலை பார்த்து வந்தார். இவரை  அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆர் வி நகர் அருகே உள்ள கன்னிமார் தேவதைகள் தெருவில் வைத்து வெட்டி படுகொலை செய்துள்ளனர். இது தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர். காவல் துறையினரின் விசாரணையில் முன் பகை காரணமாக அருளானந்த பாபு வெட்டி  படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

கணவருடன் சேர்த்து வையுங்கள்; காவல் நிலையம் அருகே தற்கொலைக்கு முயன்ற திருநங்கையால் பரபரப்பு

திண்டுக்கல்லில் மதியம் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு இடங்களில் இரண்டு நபர்கள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!