திருச்சியில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அடுத்த ரெட்டிமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 46). நேற்று முன்தினம் ரெட்டிமாங்குடியில் இருந்து சிறுகனூர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெருமாள் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்த 42 வயது பெண் ஒருவர் சுரேஷிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்ட சுரேஷ் சிறுகனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தை நிறுத்திய சுரேஷ் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
undefined
மேலும் இது தொடர்பாக வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று கூறிய சுரேஷ், மீண்டும் அந்த பெண்ணை தனது இரு சக்கரவாகனத்தில் ஏற்றிக் கொண்டு சிறுகனூர் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் நமது கொடி பறக்க வேண்டும்; தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள்
புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், டாஸ்மாக்கில் மது அருந்திக் கொண்டு இருந்த சுரேஷை கைது செய்து நிதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் பெண் மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரது 2வது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து ரெட்டிமாங்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று 3 நாட்களாக தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.