முன்னாள் எம்.பி. மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் கூறியதை அடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்தால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரது தம்பி மகளும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவுச் செயலாளராகவும் இருந்தவர் டாக்டர் மஸ்தான்(66). 1995 முதல் 2001 வரை அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இதனைத் தொடர்ந்து திமுகவில் இணைந்த அவருக்கு கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவில் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், மகள் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். முக்கிய பிரமுகர்களுக்கு நேரடியாக அழைப்பும் விடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த 22ம் இரவு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி அருகே காரில் வந்து கொண்டிருந்த நெஞ்சுவலி மற்றும் வலிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரது தம்பி மருமகன் இம்ரான் பாஷா மஸ்தானை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மஸ்தான் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் கூறியதை அடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்தால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக மஸ்தானின் கார் டிரைவரும், அவரது தம்பி மருமகனுமான இம்ரான் பாஷா, அவரது சித்தி மகன் தமீம் என்ற சுல்தான், நண்பர்கள் தவுபிக் அகமது, நசீர், லோகேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்து 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்து போது இந்த கொலையில் மஸ்தானின் தம்பி ஆதம் பாஷாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது தம்பியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? மஸ்தானின் தம்பி ஆதம் பாஷாசை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், மஸ்தானின் தம்பி மகள் ஹரிதா ஷாஹினா(26) மஸ்தான் கொலையில் தந்தைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மஸ்தானின் தம்பி மகள் ஹரிதா ஷாஹினாவை கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி, தம்பியின் மகள், தம்பியின் மருமகன் உள்பட 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.