சிறுமிகளை வைத்து ஆபாச படம் எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த இளைஞரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் மூன்று நாட்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விகடர் ஜேம்ஸ் ராஜா (வயது 32). இவர் பிரதமரை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்து பிரதமர் அலுவலகங்களுக்கு மெயில் அனுப்பியதாக கூறி நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் டெல்லியில் இருந்து வந்த பத்துக்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவர் இந்தியாவில் சிறுமிகளை வைத்து ஆபாசமாக படம் எடுத்து அதனை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக இண்டர்போல் காவல் துறையினர் சிபிஐக்கு புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் தான் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்பது பின்னர் தெரிய வந்தது. சுமார் மூன்று நாட்களாக அவரிடம் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனர்.
குழந்தைகளிடம் பாசம் காட்டாத மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது
விசாரணையில், ஆராய்ச்சி மாணவரான விக்டர் ஜேம்ஸ் ராஜா சிறுமிகளுடன் உல்லாசமாக இருப்பது போல் படம் பிடித்து அதனை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் விக்டர் ஜேம்ஸ் ராஜா வீடியோவிற்கு அதிக பார்வையாளர்கள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் தான் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பெள்ளி தம்பதியை எதிர் நோக்கி குட்டி யானை; யானையின் பிரிவால் கதறி அழுத வன ஊழியர்
மேலும் கைது செய்யப்பட்ட அந்த இளைஞரை தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை இரண்டு நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இண்டர்போல் புகாரின் அடிப்படையில் நாடு முழுவதும் 21 இடங்களில் இந்த விசாரணையும், கைதும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.