PM Modi Niece: பிரதமர் மோடியின் மருமகளிடம் கைவரிசை காட்டியவர் கைது

Published : Feb 21, 2023, 05:55 PM ISTUpdated : Feb 21, 2023, 06:08 PM IST
PM Modi Niece: பிரதமர் மோடியின் மருமகளிடம் கைவரிசை காட்டியவர் கைது

சுருக்கம்

பிரதமர் மோடியின் உறவினரிடம் ரூ.56 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் மருமகளிடம் இருந்து பையைப் பறித்துச் சென்ற நபர் திங்கள்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதல், கடந்த காலங்களில் பல குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு ரகசிய தகவலின் பேரில், இந்த வார தொடக்கத்தில் சுல்தான்புரியில் பாதலை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர் என்று காவல்துறை துணை ஆணையர் ஹரேந்திர கே சிங் கூறினார்.

Vladimir Putin: ரஷ்ய அதிபர் புதினுக்கு என்ன ஆச்சு? நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவதாகத் தகவல்

"நாங்கள் பாதலைப் பிடிக்க திட்டம் தீட்டி இருந்தோம். அவர் பைக்கில் செல்வதை பார்த்தோம். உடனே நிறுத்தச் சொல்லி சோதனையிட்டோம். அப்போது அவரது பாக்கெட்டில் ஒரு கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது." என்றும் ஹரேந்திர சிங் கூறினார். அதுமட்டுமின்றி அவர் ஓட்டி வந்தது திருடப்பட்ட பைக் எனவும் தெரியவந்தது.

விசாரணையின் போது, அவர் மற்றொரு குற்றச் செயலில் ஈடுபட தயாராக இருந்ததாகவும் ஆள் பார்த்து தன் கைவரிசையைக் காட்டுவதற்குள் காவல்துறையினரிடம் பிடிபட்டுவிட்டதாவும் காவல்துறை மூலம் அறிய முடிகிறது.

Turkey earthquake: உத்தராகண்டில் துருக்கியைப் போன்ற நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு; நிலநடுக்க வல்லுநர் எச்சரிக்கை

Deep Blue: 7 ஆண்டுகளுக்குப் பின் வைரலாகும் உலகின் மிகப்பெரிய வெள்ளை சுறா!

பாதல் சென்ற ஜனவரி 22ஆம் தேதி ராணிபாக்கில் ஆயுதச் சட்டம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.இப்போது மீண்டும் கத்தியுடன் சிக்கியுள்ளதால், அவரது ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

குற்றம் சாட்டப்படும் பாதல் 2019ஆம் ஆண்டில், பிரதமரின் மருமகள் தமயந்தி பென் மோடியிடம் ஹேண்ட் பேகை திருடிச் சென்றார். டெல்லி குஜராத்தி சமாஜ் விருந்தினர் மாளிகை அருகே ஆட்டோவில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தபோது, அவரது பையைப் பறித்துச் சென்றார். அதில் ரூ. 56,000 பணம், இரண்டு மொபைல் போன்கள், அகமதாபாத்திற்குச் செல்வதற்கான விமான டிக்கெட்டுகள், அடையாள அட்டைகள் முதலியவை இருந்தன. அந்தத் திருட்டு தொடர்பாக பாதல் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

பாதல் தொடர்ந்து குற்றங்கள் புரிந்து வருகிறார். இந்த ஆண்டில் மட்டும் 18 குற்ற வழக்குகளில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 35 குற்ற வழக்குகளில் அவருக்கு தொடர்பு உள்ளது.

தமயந்தி பென் மோடி பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் மகள் ஆவார்.

Dowry Case: வரதட்சணையில் பழைய பர்னீச்சர்... திருமணத்தை நிறுத்திய மணமகன்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!