நடத்தையில் சந்தேகம்.. மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கொடூர கணவன்.. எப்படி தெரியுமா?

By vinoth kumar  |  First Published Feb 21, 2023, 2:21 PM IST

தினமும் காலையில் வேலைக்கு செல்லும்  மனைவி இரவு 10 மணிக்கு மேல் வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால், மனைவி நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 


மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கணவர் போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.  

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கோப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (45). கேரளாவில் கூலி செய்து வருகிறார். இவரது மனைவி இன்பவள்ளி (38). இவர் சத்துணவு கூடத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி கோவையில் வசித்து வருகிறார். இளைய மகள் இலக்கியா தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். மகன் கம்யூட்டர் சென்டரில் வேலை செய்து வந்தான்.

Tap to resize

Latest Videos

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்ச்செல்வன் சொந்த கிராமத்திற்கு வந்தார். அன்று முதல் இங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில், தினமும் காலையில் வேலைக்கு செல்லும்  மனைவி இரவு 10 மணிக்கு மேல் வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால், மனைவி நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த  தமிழ்ச்செல்வன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த கணவர்   தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இன்பவள்ளியின் கழுத்தை அறுத்தார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதுகுறித்து  குமராட்சி நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இன்பவள்ளி உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக அவரது கணவர் தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!