படிக்க வந்த இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் .. - கட்டாய ஓய்வு கொடுத்து மதுரை பல்கலைக்கழகம் அதிரடி..

Published : Aug 24, 2019, 04:22 PM ISTUpdated : Aug 24, 2019, 04:23 PM IST
படிக்க வந்த இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் .. - கட்டாய ஓய்வு கொடுத்து மதுரை பல்கலைக்கழகம் அதிரடி..

சுருக்கம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு கொடுத்திருக்கிறது நிர்வாகம் .

மதுரையை சேர்ந்தவர் ராணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) . இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆராய்ச்சி மாணவியாக இருந்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதத்தில் பல்கலைக்கழக பதிவாளரிடம் ஒரு புகார் அளித்திருந்தார் .

அதில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் கர்ண மகாராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் . இது குறித்து விசாரிக்க நிர்வாகம் சார்பில் குழு அமைக்க பட்டது . அந்த குழுவின் அறிக்கைபடி பேராசிரியர் கர்ண மகாராஜன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று நிரூபணம் ஆனது .

அதனை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு முன் நடைபெற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் கர்ண மகாராஜன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது .ஆனால் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படப்படவில்லை . இந்த நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கு பேராசிரியர் கர்ண மகாராஜன் அண்மையில் விண்ணப்பித்து இருந்தார் . இது மாணவர்களிடையே சர்ச்சையை கிளப்பியது .

இந்த நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் ஆட்சிமன்ற உறுப்பினர்களின் சிறப்பு கூட்டத்தை நேற்று திடீரென்று கூட்டினார் . அதில் பாலியல் புகார் நிருபிக்கப்பட்ட பேராசிரியர் கர்ண மஹாராஜனை கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்புவது என்று முடிவு எடுக்கப்பட்டது .

PREV
click me!

Recommended Stories

ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?