திக்... திக்... பதற்றத்தில் கோவை... ஊடுருவிய தீவிரவாதிகள் எங்கே...? ஹைப்பர் டெங்ஷனில் போலீஸ்...!

By Asianet TamilFirst Published Aug 24, 2019, 12:30 PM IST
Highlights

டெட்டர்னேட்டர் எனப்படும் வெடி மருந்து குடோன்களை தற்போது போலீசார் சீல் வைத்துள்ளதாகவும், இந்த  எச்சரிக்கையை விலக்கும் வரை இந்த சீல் அகற்றப்படாது எனவும், அந்த குடோன்களில் இருந்து எந்த ஒரு பொருளையும் வெளியில் எடுத்து செல்லக் கூடாது எனவும் காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. போலீசார் சீருடையிலும், மப்டியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

உளவுத் துறை எச்சரிக்கையை தொடர்ந்து கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, வெடி மருந்து குடோன்களுக்கும் சில் வைத்து  பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே ஐஜி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விட்டு உள்ள சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  குறிப்பாக கோவை, கரூர்,ஈரோடு, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூடுதல் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. ஒரு ஷிப்டுக்கு 28 பேர் கொண்ட காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அனைத்து பயணிகளையும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். என தெற்கு ரயில்வே ஐஜி அருள்ஜோதி தகவல் தெரிவித்துள்ளார்.இதேபோல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அனுமதியுடன் இயங்கிவரும் பாறைகளை அகற்ற பயன்படுத்தப்படும் டெட்டர்னேட்டர் எனப்படும் வெடி மருந்து குடோன்களை தற்போது போலீசார் சீல் வைத்துள்ளதாகவும், இந்த  எச்சரிக்கையை விலக்கும் வரை இந்த சீல் அகற்றப்படாது எனவும், அந்த குடோன்களில் இருந்து எந்த ஒரு பொருளையும் வெளியில் எடுத்து செல்லக் கூடாது எனவும் காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போலீசார் சீருடையிலும், மப்டியிலும்  தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபர்களை பார்த்தால் உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கோவை காவல்துறையின் உச்சபட்ச கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது. 

click me!