தாய் பாசத்தை மறக்க வைத்த தகாத உறவு .. பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடூரம் ..

Published : Aug 23, 2019, 03:01 PM ISTUpdated : Aug 23, 2019, 03:04 PM IST
தாய் பாசத்தை மறக்க வைத்த தகாத உறவு  .. பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடூரம் ..

சுருக்கம்

மதுரை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாயை 3 ஆண்டுகளுக்கு பின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .

மதுரையை அடுத்த மேலூரைச் சேர்ந்தவர் ராகவநத்தம். இவரது மனைவி ரஞ்சிதா . இவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்துள்ளனர் . ராகவநத்தம் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார் . அவரது மனைவி ரஞ்சிதா 3 குழந்தைகளுடன் மேலூரில் வசித்து வந்திருக்கிறார் .

கடந்த 2016 ம் ஆண்டு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பார்கவி , யுவராஜா ஆகியோர் திடீரென்று இறந்து கிடந்தனர் . தனது குழந்தைகள் தெரியாமல் எலி மருந்தை சாப்பிட்டு இறந்து விட்டதாக ரஞ்சிதா உறவினர்களிடம் கூறி இருக்கிறார் .

ரஞ்சிதாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த கல்யாணகுமார் என்பவருக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது . இதனால்  வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ராகவநத்ததிற்கு குழந்தைகளின் மரணத்தில்  தனது மனைவி ரஞ்சிதா மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது . இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார் . அவர் புகாரின் அடிப்படையில் ரஞ்சிதாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் .

முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிய ரஞ்சிதா , காவல்துறையின் கிடுக்குபிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் குழந்தைகளை கள்ளக்காதலன் கல்யாணகுமாரோடு சேர்ந்து விஷம் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் . 

இதையடுத்து ரஞ்சிதாவையும் அவரது கள்ளக்காதலன் கல்யாணகுமாரையும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் காவல்துறையினர்  கைது செய்துள்ளனர் .

PREV
click me!

Recommended Stories

பேருந்தில் இவ்வளவு பேர் இருக்கும் போதே ஸ்ரீதர் செய்த வேலை.. கண்ட இடத்தில் கை வைத்ததால் பதறிய பள்ளி மாணவி
தனியாக செல்லும் பொண்ணுங்க தான் டார்கெட்.. தொடக்கூடாத இடத்தில் தொட்டு சிக்கிய 27 வயது இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி