கமாண்டோ படை குவிப்பு .. தீவிர கண்காணிப்பில் தமிழகம் .. முக்கிய இடங்களில் பலத்த சோதனை ..

Published : Aug 24, 2019, 12:30 PM ISTUpdated : Aug 24, 2019, 12:32 PM IST
கமாண்டோ படை குவிப்பு .. தீவிர கண்காணிப்பில் தமிழகம் .. முக்கிய இடங்களில் பலத்த  சோதனை ..

சுருக்கம்

தமிழகத்தில் இலங்கையைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது . இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 6  பேர் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும் கோவையில் அவர்கள் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் உளவுத்துறைக்கு தகவல் வந்திருக்கிறது . இதையடுத்து தமிழக அரசை உளவுத்துறை எச்சரித்தது .

உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது . குறிப்பாக கோவையில் தாக்குதல் நடத்த கூடும் என்று தகவல் வந்திருப்பதால் 2000 போலீசாருக்கு மேல் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர் . சோதனை சாவடிகள் முழுவதும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன . பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது .

இந்தநிலையில் பிளாக் கமாண்டோ எனப்படும் அதிவிரைவு சிறப்பு படையினர் கோவையில் இறக்கப்பட்டுள்ளனர் . நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்திய கமெண்டோ படை வீரர்கள் இன்று அணிவகுப்பு நடத்தினர்.  மேலும்  பேருந்து நிலையத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் சிறப்பு காவல் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை