மதுரையில் விடுதி பெண்களின் குளிக்கும், உடைமாற்றும் காட்சிகளை டாக்டருக்கு அனுப்பிய மாணவி கைது!!

By Narendran S  |  First Published Sep 25, 2022, 7:55 PM IST

மதுரையில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் காட்சிகள், உடை மாற்றும் காட்சிகளை போட்டோ, வீடியோக்கள் எடுத்து கமுதி டாக்டருக்கு அனுப்பிய அதே விடுதியைச் சேர்ந்த மாணவியையும்,  கமுதி டாக்டரையும் மதுரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.


மதுரையில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் காட்சிகள், உடை மாற்றும் காட்சிகளை போட்டோ, வீடியோக்கள் எடுத்து கமுதி டாக்டருக்கு அனுப்பிய அதே விடுதியைச் சேர்ந்த மாணவியையும்,  கமுதி டாக்டரையும் மதுரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (வயது 31). இவர் எம்பிபிஎஸ் படித்து முடித்துவுிட்டு கமுதியில் முஸ்லீம் பஜாரில் கிளினிக் நடத்தி வருகிறார். டாக்டர் ஆசிக் என்பவருக்கு திருமணமாகி 3 ஆண்டாகிவிட்டது. இவரது கிளினிக் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி.

இதையும் படிங்க: அதிர்ச்சி !! பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட 12 ஆம் வகுப்பு மாணவன்.. இது தான் காரணமா.?

Tap to resize

Latest Videos

இவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் பி.எட்., படித்து வருகிறார். இவருக்கும், கமுதியைச் சேர்ந்த டாக்டர் ஆசிக் என்பவருக்கும் பல ஆண்டாக நட்பு இருந்துள்ளது. இதற்கிடையில் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார் காளீஸ்வரி. இவர் தன்னுடன் தங்கியுள்ள மற்ற பெண்களின் குளியல் அறை காட்சிகள், உடைகள் மாற்றும் காட்சிகளை புகைப்படம் மற்றும் வீடியோக்களாக எடுத்து டாக்டர் ஆசிக் என்பவருக்கு அனுப்பி வந்துள்ளார். இப்படி போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து அனுப்புவதை பார்த்த பெண் ஒருவர், விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.. என்ன நடந்தது..?

அவர், காளீஸ்வரியின் செல்போனை பார்த்தபோது அதுபோன்ற போட்டோக்கள், வீடியோக்கள் நிறைய இருந்துள்ளன. இதையடுத்து விடுதி மேலாளர் மதுரை அண்ணாநகர் போலீஸில் புகார் தெரிவித்தார். அங்கிருந்து சைபர் கிரைம் போலீஸாருக்கு புகார் மாற்றப்பட்டு, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்கை விசாரித்து வந்தார். போலீஸாரின் விசாரணையில் ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் அனுப்பியது உண்மை என தெரிந்தது. இதையடுத்து, டாக்டர் ஆசிக், மாணவி காளீஸ்வரி ஆகிய இருவரையும் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

click me!