பெரியப்பா மகள் மீது மோகம்... கல்யாணம் ஆன இரண்டே நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் மாப்பிள்ளை கண்முன்னே நடந்த சம்பவம்

Published : Nov 15, 2018, 12:16 PM ISTUpdated : Nov 15, 2018, 12:17 PM IST
பெரியப்பா மகள் மீது மோகம்... கல்யாணம் ஆன இரண்டே நாளில் விருந்துக்கு வந்த இடத்தில்  மாப்பிள்ளை கண்முன்னே நடந்த சம்பவம்

சுருக்கம்

பெரியப்பா மகள் மீது ஏற்பட்ட காதலால், அந்த பெண்ணுக்கு கல்யாணம் நடந்த இரண்டாவது நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள  புலிக்குத்தி  ஊரை சேர்ந்த 21 வயதான ரம்யாவுக்கு கடந்த 11-ந் தேதி ரங்கராஜ் என்பவருடன்  கல்யாணம் நடந்தது. பின்னர் விருந்துக்காக 2-வது நாளில் புதுமண தம்பதிகள் புலிக்குத்தி கிராமத்துக்கு விருதுக்காக வந்தனர். பொண்ணு, மாப்பிள்ளையை பார்க்க ஊரே திரண்டு வந்தது. அப்போது ரம்யாவின் சித்தப்பா மகன் முத்துக்கிருஷ்ணனும் புதுமணத் தம்பதியை பார்க்க வந்திருந்தார். விருந்துக்கு ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது. அந்த  நேரத்தில் ரம்யாவும், முத்துக்கிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  தேடி பார்த்தால் முத்துகிருஷ்ணனையும் காணவில்லை. இருவரையும் தேடி பார்த்த போது, வீட்டின் அருகில் இருவருமே மயங்கி விழுந்து கிடந்தனர்.

அவர்களுக்கு அருகில் ஒரு விஷ பாட்டில் உருண்டு கிடந்தது. இதைப் பார்த்து பதறிய உறவினர்கள் அலறி அடித்து கொண்டு இருவரையும் போடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால் வழியிலேயே ரம்யா உயிரிழந்தார்.  இதையடுத்து முத்துக்கிருஷ்ணனை தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அங்கு அவரது நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது. 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான், ரம்யாவும், சித்தப்பா மகனான அண்ணன்  முத்துக்கிருஷ்ணனும் ஒருவரையொருவர்  காதலித்து வந்தார்கள் என்பது தெரியவந்தது.  இந்த லவ் மேட்டர் ரம்யா வீட்டுக்கும் தெரிந்திருக்கிறது. விஷயம் தெரிந்த உடனேயே, அதிர்ச்சி அடைந்த பெற்றோர், "இது தவறு என்று பலமுறை ரம்யாவை கண்டித்திருக்கிறார்கள். ஆனால்  பெரியப்பா மகள் ரம்யாவோ பிடிவாதமாக இருந்ததுடன், தன் காதலால் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளதாக பெற்றோரிடம் எடுத்து சொல்லி வந்துள்ளார். ரம்யாவின் பிடிவாதத்தை பார்த்ததும் பயந்துபோன பெற்றோர்கள், உடனடியாக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள்.  

ஆனால் மாப்பிள்ளை  வீட்டில்  இவர்களில் இந்த காதல் விவகாரத்தை மறைத்து திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள்.  ரம்யாவிற்கு கல்யாணம் நடந்ததை  சித்தப்பா மகன்  முத்துகிருஷ்ணனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. அதனால்தான் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்ததும் தற்கொலைக்கு துணிந்து விட்டார்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.  

PREV
click me!

Recommended Stories

ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
நான்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆசைவார்த்தை கூறி பலான போட்டோவை வாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!