Shocking : திருமணம் செய்ய மறுத்த காதலிக்கு கத்திக்குத்து.. 10 முறை குத்தி கொன்ற வெறி பிடித்த காதலன்.!!

By Raghupati R  |  First Published Mar 1, 2023, 5:22 PM IST

பெங்களூரில் தனது காதலனால் குத்தப்பட்டதால் 25 வயது பெண் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் தனது காதலனால் குத்தப்பட்டார். 25 வயதான அப்பெண் காதலனால் குறைந்தது 10 முறை குத்தப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதைய 5ஜி காலத்திலும் காதலிக்க மறுத்தால் காதலியை கொல்வது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது. காதலை மறுத்த காதலியையோ அல்லது காதலனையோ கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் காதலனை கொன்ற காதலியையும், நம் ஊரில் இப்போது வரை கொல்லும் அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

Tap to resize

Latest Videos

குற்றம் சாட்டப்பட்ட தினக்கர் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்தப் பெண்ணுடன் உறவில் இருந்தார் என்றும்,  ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தினக்கர், லீலாவைக் குத்திக் கொள்ள முடிவு செய்தார். ஏனெனில் அவர்கள் திருமணம் செய்து கொள்வதை அவரது குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க..Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!

சாதி வேறுபாடு காரணமாக பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு தயாராக இல்லை என்பதால்,  தினக்கர் அந்த பெண்ணை கொல்ல திட்டமிட்டு சரமாரியாக 10 முறைக்கும் மேல் குத்தி கொன்றார். பெண்ணை இளைஞர் ஒருவர் குத்தி கொன்ற சம்பவம் பெங்களுருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க..TN Rain Alert : மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு விபரம்

click me!