ஒரு பெண்ணுக்கு இரண்டு வாலிபர்கள் போட்டாபோட்டி... இறுதியில் நடந்த பயங்கரம்..!

Published : Aug 16, 2022, 02:55 PM ISTUpdated : Aug 16, 2022, 02:57 PM IST
ஒரு பெண்ணுக்கு இரண்டு வாலிபர்கள் போட்டாபோட்டி... இறுதியில் நடந்த பயங்கரம்..!

சுருக்கம்

இரண்டு வாலிபர்கள் இடையே சிறுமியை காதலிக்க ஏற்பட்ட காதல் போட்டி கொலையில் முடிந்தது. ஆத்திரத்தில் கொலை செய்த வாலிபர் போலீசார் கைது செய்துள்ளனர். 

இரண்டு வாலிபர்கள் இடையே சிறுமியை காதலிக்க ஏற்பட்ட காதல் போட்டி கொலையில் முடிந்தது. ஆத்திரத்தில் கொலை செய்த வாலிபர் போலீசார் கைது செய்துள்ளனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தோல்ஷாப் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (26). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தான் வேலை செய்யும் நிறுவனத்தின் அருகே உள்ள முடிதிருத்தும் கடைக்கு சென்ற மாரிமுத்து அங்கு நேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கீழ்குப்பம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் (23) என்ற நபருக்கும், மாரி முத்துவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

இதையும் படிங்க;- எப்போ சர்ச்சுக்கு வந்தாலும் விடாமல் பாதிரியார் ஓரினச்சேர்க்கை! வலி தாங்க முடியாமல் பெற்றோரிடம் கதறிய சிறுவன்.!

இதனால், ஆத்திரமடைந்த மைக்கேல் முடி திருத்தும் கடையில் இருந்த கத்தியை கொண்டு மாரிமுத்து கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மாரிமுத்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே, அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைக்கேலை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாகவும், ஆகையால், இருவருக்கும் மோதல் ஏற்பட்டு கொலையாக முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க;- புருஷனை இழந்த நீ இப்படி செய்யறது தப்புமா! மகளுக்கு அட்வைஸ் செய்த பெற்றோர்.. ஆத்திரத்தில் வாலிபர் செய்த பகீர்.!

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!