தகாத உறவில் ஈடுபட்டவரை சூலாயுதத்தால் குத்திக்கொலை...ஆணுறுப்பை அறுத்தெறிந்து கொன்ற பயங்கரம்!

Published : Aug 12, 2018, 04:02 PM ISTUpdated : Sep 09, 2018, 07:50 PM IST
தகாத உறவில் ஈடுபட்டவரை சூலாயுதத்தால் குத்திக்கொலை...ஆணுறுப்பை அறுத்தெறிந்து கொன்ற பயங்கரம்!

சுருக்கம்

கள்ளக்காதல் விவகாரத்தில் கோவில் சூலாயுதத்தால் குத்தி, வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கள்ளக்காதல் விவகாரத்தில் கோவில் சூலாயுதத்தால் குத்தி, வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த துலுக்கனூர் வழியாக செல்லும் வசிஷ்ட நதி தடுப்பணையில் ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயில் எரிக்கப்பட்டு நிர்வாணமாக கிடந்த 45 வயது மதிக்கத்தக்கவர் சடலத்தை மீட்டனர். இறந்தவரின் முகம், முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குத்தப்பட்டிருந்தன.  

எரித்து கொலை செய்யப்பட்ட பகுதியில் பாலிதீன் கவர் சுற்றப்பட்ட 5 லிட்டர் பிளாஸ்டிக் கேன் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் பெட்ரோல் இருந்ததும் தெரிவந்துள்ளது. தொடந்து ஆய்வு செய்தபோது ஆற்றங்கரையோரத்தில் உள்ள சுடுகாட்டில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரிக்கப்பட்டதும் தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் ரத்த துளிகள் பல்வேறு இடங்களில் சிதறி கிடந்தன. கரும்பு தோட்டத்தில் சென்று பார்த்த போது சூலாயுதம் ரத்தக் கறையுடன் இருந்ததை கைப்பற்றினர். அது சுடுகாட்டிலுள்ள அம்மன் கோவிலில் இருந்து பிடுங்கியது தெரிந்தது. 

இது தொடர்பாக போலீசார் தரப்பில் ஆற்றில் வீசப்பட்டவர் பெண்ணை அழைத்து வந்து உல்லாசமாக இருந்திருக்கலாம். இதை யாரேனும் நேரில் பார்த்து, அடித்துக்கொலை செய்து தீயிட்டு எரித்து ஆற்றில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.  மேலும் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டது யார் என்பது தொடர்பான தகவல் தெரியவில்லை.

PREV
click me!

Recommended Stories

தாய் தந்தையைக் கொன்று ரம்பத்தால் துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்!
பேருந்தில் இவ்வளவு பேர் இருக்கும் போதே ஸ்ரீதர் செய்த வேலை.. கண்ட இடத்தில் கை வைத்ததால் பதறிய பள்ளி மாணவி