நிர்பயா வழக்கில் தூக்கு.... கடைசி திக் ...திக் நிமிடங்கள்... என்ன நடந்தது..!!

By Thiraviaraj RMFirst Published Mar 20, 2020, 10:05 AM IST
Highlights

2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அந்த கொடூர சம்பவத்தை மக்கள் யாரும் மறந்திருக்கவில்லை. அந்த பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டவர்களில் முகேஷ், வினய், பவண், அக்‌ஷய் ஆகிய நான்கு பேருக்கும் இன்று காலை5.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கிலிடப்பட்ட அந்த திக் திக் நிமிடங்கள் அவர்களின் மனநிலை எப்படி இருந்தது. அங்கே என்ன நடந்தது.

T.Balamurukan

2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அந்த கொடூர சம்பவத்தை மக்கள் யாரும் மறந்திருக்கவில்லை. அந்த பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டவர்களில் முகேஷ், வினய், பவண், அக்‌ஷய் ஆகிய நான்கு பேருக்கும் இன்று காலை5.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கிலிடப்பட்ட அந்த திக் திக் நிமிடங்கள் அவர்களின் மனநிலை எப்படி இருந்தது. அங்கே என்ன நடந்தது.

 தூக்கிலிடப்பட்ட நால்வரின் மனநிலை நேற்று இரவில் எப்படி இருந்தது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. தண்டனையை தள்ளிப் போட சட்ட ரீதியாக தூக்குமேடைக்கு போகும் முன்பு வரையிலும் எவ்வளவோ முயன்றும் நீதிபதிகள் வழக்கு சரியாக நடத்தப்பட்டிருக்கிறது என்று கைவிரித்தார்கள் நீதிபதிகள். 
உத்திரபிரதேசம், மாநிலம் மீரட் பகுதியில் இருந்து பவன் என்பவர் அந்த 4பேரை தூக்கிலிடுவதற்காக அழைத்து வரப்பட்டிருந்தார். 8 தூக்கு கயிறுகள் வழங்கப்பட்டது.ஒருவரை சரியாக தூக்கிலிட்டால் அவருக்கு கூலி 20 ஆயிரம் வழங்கப்படும். ஆக மொத்தம் 4 பேருக்கும் சேர்த்து 80 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

அந்த இரவில் நான்கு குற்றவாளிகளில் முகேஷ், வினய் ஆகிய இருவரும் தங்களது இரவு உணவான சப்பாத்தி உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டார்கள். பவண், அக்‌ஷய் ஆகிய இருவரும் ரெம்ப சோகத்துடனே இருந்தார்களாம். சிறை காவலர்கள் இரவு உணவு கொடுத்த போது வேண்டாம் என்று மறுத்து விட்டார்களாம். அவர்கள் இருவரும் கலக்கத்துடனே இருந்திருக்கிறார்கள். தூக்கு கயிறு புதிதாக கொண்டு வரப்பட்டது. அந்த கயிறுகள் பவனால் சரிபார்க்கப்பட்டது.
டீ.காபி. தண்ணீர் வழங்கப்பட்டிருக்கிறது. உறவினர்கள் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாம். கடைசி நிமிடத்திலாவது தூக்கு நிறுத்துவார்கள் என்கிற நம்பிக்கையில் இருந்திருக்கிறார்கள் அந்த நால்வர். ஆனாலும் சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது
கடைசி ஆசை என்னவென்று அந்த 4பேரிடமும் கேட்டதற்கு யாரும் ஒன்றும் சொல்லவில்லையாம்.அப்போது தான் அவர்களுக்கு தெரிந்தது தூக்கு உறுதி என்று. 

 முகேஷின் உறவினர்கள் அவரை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியது. ஆனாலும் அந்த 4 பேரும்  கடைசி ஆசை எது என்பதில் கையெழுத்திடவில்லை. அவர்களது உடமைகள், சிறையில் இருந்த காலத்தில் அவர்கள் சம்பாதித்த பணம் அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கப்படும்.

click me!