நிர்பயா குற்றவாளிகள் தூக்கு... மகளீர் அமைப்புகள் என்ன சொல்லுகிறார்கள்...,

By Thiraviaraj RMFirst Published Mar 20, 2020, 8:57 AM IST
Highlights

தவறு செய்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும். நீதி தாமதப்படலாம். ஆனால் ஒருநாள் கிடைத்துவிடும்

T.Balamurukan

மருத்துவ மாணவி நிர்பயாவை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒரேசமயத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.திகார் சிறையில் 4பேரின் தூக்குக்கு பிறகு அவர்களின் உயிர் பிரிந்ததை டாக்டர்கள் உறுதி செய்ததாக சிறை இயக்குனர் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார்.

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி ஓடும் பஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட சம்பவம் உலத்தையே உலுக்கியது.அந்த வழக்கில் 7ஆண்டுகள் கழித்து  இன்று நீதி கிடைத்துள்ளது. இன்று தான் திருப்திகரமாக இருப்பதாக நிர்பயாவின் தாய் கூறியுள்ளார். ஒட்டுமொத்த தேசமும் இந்த குற்றத்தை எண்ணி கூனிகுறுகிப் போய் மிகவும் வேதனைப்பட்டது. இதற்கு தீர்வு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. திகார் சிறைமுன்பு சமூக ஆர்வலர்கள், பெண் உரிமைக்கான அமைப்புகள் ஒன்று கூடியிருந்தார்கள். அதிகாலை தூக்கிலிடப்பட்டதும். அவர்கள் எல்லாம் சிறை வாசல் முன்பு கூடியிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது என்று நிர்பயாவின் தாயார் உருக்கமாக தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் அந்த 4 கொடூரர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை காப்பற்ற ஒரு கும்பல் முயற்சி செய்தது.ஆனால் இந்திய தேசம் , பெண்களுக்கான நியாயம் கிடைக்கச் செய்திருக்கிறது.இது இந்தியாவின் வரலாறு.

 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து  நிர்பயாவின் தாயார்.., 

"நிர்பயாவுக்கு இறுதியாக நியாயம் கிடைத்திருக்கிறது. என் மகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது.  எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது.

இந்தியாவின் மகள்களுக்கான, அவர்களின் நீதிக்கான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடருவோம். நீதிக்கான எங்கள் காத்திருப்பு வேதனையாக இருந்தது, ஆனால் இறுதியாக எங்களுக்கு நீதி கிடைத்தது. எனது மகளின் புகைப்படத்தை நான் ஆரத்தழுவி கொண்டேன்” என்றார்.
ஸ்வாதி மாலிவால், தேசிய மகளிர் ஆணையம்.தூக்கு தண்டனை குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க நாள். 7 ஆண்டுகளுக்கு பிறகு நிர்பயாவிற்கு நீதி கிடைத்துள்ளது. அவரது ஆன்மா இனி சாந்தி அடைந்துவிடும். பாலியல் குற்றவாளிகளுக்கு இந்நாடு ஒரு உறுதியான தகவலை தெரிவித்துள்ளது. நீங்கள் தவறு செய்தால் நிச்சயம் தூக்கில் போடப்படுவீர்கள் என்றார்.
  ரேகா ஷர்மா, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் இது குறித்து பேசும் போது..,
 அநீதிக்கு எதிராக இன்று ஒரு உதாரணம் அரங்கேறியுள்ளது. இது சீக்கிரமே நடந்திருக்க வேண்டும். தற்போதாவது மக்கள் புரிந்து கொள்வர். தவறு செய்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும். நீதி தாமதப்படலாம். ஆனால் ஒருநாள் கிடைத்துவிடும்,என்றார். 
 

click me!