நிர்பயா ஆன்மா சாந்தியடைந்தது..4 பேரும் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டனர்.

By Thiraviaraj RMFirst Published Mar 20, 2020, 7:36 AM IST
Highlights

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாடுமுழுவதும் போராட்டம் வெடித்தது. தலைநகர் டெல்லியில் மாணவர்கள் திரண்டனர். போராட்டங்கள் வன்முறையாக மாறின.நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் திகார் சிறையில் இன்று 20.03.2020 அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

T.Balamurukan

டிசம்பர் 16.. இந்த நாளை டெல்லி மக்களால் எளிதில் மறக்க முடியாது. டெல்லி மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியது அந்தசம்பவம். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கொடூர வழக்கில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 16, 2012 மருத்துவ மாணவி நிர்பயா டெல்லியில் பேருந்து ஒன்றில் தன் நண்பருடன் பயணித்துக்கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாடுமுழுவதும் போராட்டம் வெடித்தது. தலைநகர் டெல்லியில் மாணவர்கள் திரண்டனர். போராட்டங்கள் வன்முறையாக மாறின.நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் திகார் சிறையில் இன்று 20.03.2020 அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

டெல்லி கடந்த 2012, டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இந்த வழக்கில் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன், சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். மரண தண்டனைக்கு எதிராக சீராய்வு மனு, கருணை மனு என குற்றவாளிகள் தங்களுக்கான சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினர். எனினும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை. அவர்களை தூக்கிலிடும் தேதி மட்டும் இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக மார்ச் 20-ஆம் தேதி அதிகாலை 5.30 மணி என நிர்ணயிக்கப்பட்டு துக்கிலிடப்பட்டது.

இதற்கிடையில், நால்வரையும் தூக்கிலிடுவதற்கான ஒத்திகையை அதற்கான சிறை ஊழியர் கடந்த புதன்கிழமை காலை நடத்தினார். இந்நிலையில், நால்வரும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.முன்னதாக, மரண தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் நேற்று நள்ளிரவு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

click me!