க்ளுவே இல்லாம் கூலாக ஸ்கெட்ச் போட்டு கொள்ளை.. போலீசிக்கே போக்கு காட்டிய கொள்ளையன் சிக்கியது எப்படி?

By vinoth kumar  |  First Published Mar 14, 2023, 2:32 PM IST

சென்னை சாலிகிராமம் குமரன் காலனியில் வசித்து வருபவர் சந்தோஷ் குமார் (65 ). கோனிகா கலர் லேப் உரிமையாளர். கடந்த பிப்ரவரி 22ம் தேதி குடும்பத்துடன் ஐதராபாத் சென்றிருந்தார். பிப்ரவரி 28ம் தேதி சென்னை திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 


கோனிகா கலர் லேப் உரிமையாளர் சந்தோஷ் குமார் என்பவரது வீட்டில் ரூ.1.5 கோடி மதிப்பில் பணம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் திருநெல்வேலியை சேர்ந்த கொள்ளையன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை சாலிகிராமம் குமரன் காலனியில் வசித்து வருபவர் சந்தோஷ் குமார் (65 ). கோனிகா கலர் லேப் உரிமையாளர். கடந்த பிப்ரவரி 22ம் தேதி குடும்பத்துடன் ஐதராபாத் சென்றிருந்தார். பிப்ரவரி 28ம் தேதி சென்னை திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 66 சவரன் தங்க நகை, 80 கிலோ வெள்ளி பொருட்கள், 13.5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களின் வயர்களை அறுத்துவிட்டு கொள்ளையடித்து சென்றதால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. 

இதனால், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி  கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட கொள்ளையனை திருநெல்வேலியில் சாத்தான்குளம் பகுதி சேர்ந்த முத்து என்பவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும், இவர் மீது 4க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிவந்தது. குறிப்பாக விருகம்பாக்கம் பகுதிகளில் கோனிகா கலர் லேப் உரிமையாளர் சந்தோஷ்குமார் என்பவரின் வீட்டில் ரூ.1.5 கோடி மதிப்பில் பணம் நகைகள் கொள்ளை அடித்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். 

click me!