நகைக்கடை ஷட்டரை உடைத்து கொள்ளை..! 6 கிலோ தங்க நகைகள் உருக்கிய கொள்ளையர்கள்- வெளியான பரபரப்பு தகவல்

By Ajmal Khan  |  First Published Mar 14, 2023, 2:26 PM IST

பெரம்பூரில் நகைக்கடையில் ஷட்டரை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கொள்ளையர்கள் உருக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நகைக்கடை ஷட்டர் உடைப்பு

சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள நகைக்கடையில் கடந்த மாதம் ஷட்டரை உடைத்து 9 கிலோ தங்க நகை மற்றும் வைர நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில்,  இந்த கொள்ளையில் பெங்களூரை சேர்ந்த 6 பேர் கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. முக்கிய குற்றவாளியான கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகிய 2 பேரை பெங்களூர் போலீசார் ஏற்கனவே வேறொரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். அவர்களிடமிருந்து 2 அரை கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tap to resize

Latest Videos

கோவாவுக்கு இன்ப சுற்றுலா சென்ற குடும்பம்.. நடு ராத்திரியில் ஏற்பட்ட பகீர் சம்பவம்

நகைகளை உருக்கிய கொள்ளையர்கள்

இந்தநிலையில் முக்கிய குற்றவாளியான கங்காதரன், ஸ்டீபன் ஆகிய இருவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர்களிடம் இருந்து 2.1  கிலோ உருக்கப்பட்ட நகைள் பறிமுதல் செய்தனர். மேலும் பெங்களூர் மகாலட்சுமி லேஅவுட் போலீசார் கைப்பற்றிய 2.4 கிலோ நகைகளையும் நீதிமன்றத்தின் மூலமாக பெற்றுள்ளனர். பெரம்பூர் நகைக்கடை யில் 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடித்த விவகாராத்தில் 4.5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார்.கொள்ளை அடித்த நகைகளில் 6 கிலோ நகைகளை உருக்கிய கொள்ளையர்கள், 2 கிலோ தங்க நகைகளை மட்டும் உருக்காமால் உடைத்து வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அருண் மற்றுற் கவுதம் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 5 நாட்கள் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து   கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகியோரை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர்.

இதையும் படியுங்கள்

நகைக்கடை ஷட்டர் உடைப்பு..! 9 கிலோ தங்கம், வைரம் கொள்ளை-சிசிடிவி ஹார்டு டிஸ்கையும் கொண்டு சென்ற கொள்ளையர்கள்

click me!