கேரளா கொடூர நரபலி...! பெண்ணை கொலை செய்த பின் கொலையாளி பேஸ்புக்கில் போட்ட ஹைக்கூ கவிதை... அதிர்ச்சியில் போலீஸ்

By Ajmal Khan  |  First Published Oct 14, 2022, 10:14 AM IST

கேரளாவில் கொடூரமாக பெண்களை நரபலி கொடுத்த  பின்  பேஸ்புக்கில் மருத்தவர் பகவல் சிங் போட்ட ஹைக்கூ கவிதை போலீசாரை சந்தேகம் அடைய செய்துள்ளது. இதனையடுத்து குற்றவாளிகளை 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


கேரளாவில் கொடூர நரபலி

கேரளாவில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலி மந்திரவாதியான ஷாபி மற்றும் மருத்துவர் பகவல் சிங் அவரது மனைவி லைலாவையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எர்ணகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த போலி மந்திரவாதியான ஷாபி,  தனது மனைவியின் செல்பேசியில் இருந்து சமூக வலைதளத்தில் 'ஸ்ரீதேவி' என்ற பெயரில் போலி கணக்கை உருவாக்கினார். அப்போது மருத்துவர் பகவான் சிங் தொடர்பு கிடைத்துள்ளது. பகவான் சிங்   தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஒரு சாமியார், தந்திரம் செய்ய கூடியவர், ஹைக்கூ கவிஞர் என்று பதிவு செய்து  இருக்கிறார். மேலும் பகவான் சிங்கை முகநூலில் 1100க்கும் அதிகமான பாலோவர்ஸ் இருந்துள்ளனர். இதன் மூலம் அதில் இருந்து மருத்துவர் பகவான  சிங்கும், மற்றும் அவரது மனைவி லைலாவுடன் போலி மந்திரவாதி ஷாபி நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

பணம் கொடுத்து ஏமாற்றி கொலை

அப்போது இளமையாக இருக்கவும், பணக்காரராக வேண்டும் என்ற தங்களது ஆசையை கூறியுள்ளனர். இதனையடுத்து நரபலி கொடுத்தால் உடனடியாக செல்வம் பெருகும் என ஷாபி நம்ப வைத்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து தான் கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி எர்ணாகுளம் காலடியில் லாட்டரி வியாபாரம் செய்துவந்த ரோஸ்லி என்ற பெண்ணையும் பண ஆசை காட்டியுள்ளார். அந்த பெண்ணை மருத்துவர் பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து வந்து கட்டிலில் நிர்வாணமாக கட்டி வைத்து கொலை செய்துள்ளனர். இதனையடுத்து இரண்டாவது முறையாக கடந்த மாதம் 26-ம் தேதி எர்ணாகுளத்தில் லாட்டரி விற்று வந்த தருமபுரியைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணையும் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து சென்றுள்ளனர்.  பத்மாவை நரபலி கொடுத்தப் பிறகு சில பூஜைகள் செய்துள்ளார் முகமது ஷாஃபி.

மருத்துவரின் ஹைக்கூ கவிதை

பின்னர் உடலை 56 துண்டுகளாக வெட்டியுள்ளனர். அப்போது தான் உடலின் ஒரு சில பாகங்களை சாப்பிடவும் செய்துள்ளனர். இந்தநிலையில் செப்டம்பர் 26 ம் தேதி நரபலி கொடுக்கப்பட்டதற்கு இரண்டு தினங்களுக்கு பிறகு மருத்துவர் பகவல் சிங் தனது முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், அதில், ஒரு அடுப்பு உலை, வேலை செய்யும் கொல்லனின் மனைவி, அவள் உடல் வளைந்திருந்தது என பதிவு செய்துள்ளார்.இந்த ஹைக்கூ கவிதை போலீசாரை சந்தேகப்படவைத்துள்ளது. நரபலிக்கும் இந்த கவிதைக்கும் தொடர்பு இருக்கலாம் என விசாரணையில் இறங்கியுள்ளனர்.

பானி பூரியை மீண்டும், மீண்டும் வாங்கி ருசித்து சாப்பிடும் யானை..! சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ

12 நாட்கள் விசாரணைக்கு அனுமதி

இந்தநிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண்மணி தாமும் மாந்திரீகரான ஷாபியின் வலையில் சிக்கவிருந்ததாகவும் அதில் இருந்து கடைசியில் மீண்டதாகவும் கூறினார். தன்னிடம் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ஷாபி உறுதி அளித்ததாகவும் ஆனால் வேண்டாம் என கூறியதால் ரோஸிலினை ஷாபி அழைத்துச் சென்றார் என அந்த பெண்மணி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். நரபலி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஷாபி, பகவல் சிங், லைலா ஆகிய 3 பேரை 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எர்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

கணவரென்றும் பாராமல் வெளுத்த மனைவி! காதலியுடன் ஷாப்பிங் சென்று சிக்கிக்கொண்டார்: வைரல் வீடியோ

click me!