ஓடிப்போன மகன்... தாயை ஆடையின்றி இழுத்துச் சென்று மின்கம்பத்தில் கட்டி வைத்த கொடுமை!

By SG Balan  |  First Published Dec 11, 2023, 7:58 PM IST

இளம்பெண் தன் காதலனுடன் ஓடிப்போனதாக அறிந்த அவரது குடும்பத்தினர், புது வந்தமுரி கிராமத்தில் உள்ள பையனின் வீட்டை தேடிச் சென்று தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் இளைஞரின் தாயை நிர்வாணமாக இழுத்துச் சென்று, மின்கம்பத்தில் கட்டி வைத்தனர் என்று சொல்லப்படுகிறது.


கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டு, நிர்வாணமாக இழுத்துச் சென்று மின்கம்பத்தில் கட்டப்பட்டி வைத்துள்ளனர் என போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.

வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்யவிருந்த பெண்ணுடன் அவரது மகன் ஓடிப்போனதால், இவ்வாறு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இளம்பெண் தன் காதலனுடன் ஓடிப்போனதாக அறிந்த அவரது குடும்பத்தினர், புது வந்தமுரி கிராமத்தில் உள்ள பையனின் வீட்டை தேடிச் சென்று தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் இளைஞரின் தாயை நிர்வாணமாக இழுத்துச் சென்று, மின்கம்பத்தில் கட்டி வைத்தனர் என்று சொல்லப்படுகிறது.

ம.பி.யில் நாய்க்குட்டியைக் தரையில் வீசி காலால் நசுக்கிக் கொன்ற நபர்!

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்தத் தாயை விடுவித்து, இந்தக் கொடுமையில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் வேறு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெலகாவி போலீஸ் கமிஷனர் சித்தராமப்பா கூறுகையில், ஒரே சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து வந்ததாகவும் திங்கள்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறிதாகவும் கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளைஞரின் வீட்டிற்குள் புகுந்து அவரது தாயை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, “குற்றம் இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்துள்ளார். இந்தச் சம்பவம் "மிகவும் மனிதாபிமானமற்றது" என்று குறிப்பிட்ட சித்தராமையா, "இது ஒட்டுமொத்த சமூகத்தையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இதுபோன்ற கொடூரமான செயல்களை எக்காரணம் கொண்டும் அரசு பொறுத்துக் கொள்ளாது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நடுவீட்டில் வெடித்துச் சிதறிய வாஷிங் மெஷின்! அறையில் இருந்த பொருட்கள் மொத்தமும் தீயில் நாசம்!

 

click me!