திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகிரி மனைவி இந்துமதி(25). இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சிவகிரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். தற்போது இந்துமதி ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனி ஒன்றில் வேலை செய்து தனது பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார்.
திருப்பத்தூர் அருகே திருமணத்தை மீறிய உறவில் பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகிரி மனைவி இந்துமதி(25). இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சிவகிரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். தற்போது இந்துமதி ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனி ஒன்றில் வேலை செய்து தனது பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும், சின்ன மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஜீவா(23). தனியார் பள்ளி ஓட்டுநராக உள்ளார். இவருக்கும் இந்துமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதனிடையே இந்துமதி கர்ப்பமடைந்துள்ளார். இதனால் யாருக்கும் தெரியாமல் நாட்றம்பள்ளியில் தனி குடுத்தனம் நடத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து இந்துமதிக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தனக்கு குழந்தை பிறந்ததை அறிந்தால் எங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தன்னை ஒதுக்கி விடுவார்கள் என இந்துமதி தவித்தார். அதே நேரத்தில், பிறந்த குழந்தை தமக்கு வேண்டாம் வேறு யாராவது குழந்தை இல்லாதவர்களுக்கு கொடுத்து விடலாம் பிறகு நாம் முறைப்படி திருமணம் செய்து கொண்டு வாழலாம் என ஜீவா இந்துமதியிடம் வலியுறுத்தி வந்தார்.
அதற்கு இந்துமதி முழு சம்மதம் தெரிவிக்காத நிலையில், ஜூவாவிற்கு ஏற்கனவே அறிமுகமான கந்திலி அருகே கெஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சென்றாயன் மனைவி பப்பி(30), தோரணம்பதியை சேர்ந்த மணிகண்டன்(34), ஆகியோர் மூலம்நாட்றம்பள்ளியை சேர்ந்த கலைச்செல்வன்(47). என்பவருக்கு, பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. குழந்தை விற்ற ஒரு சில நாட்களிலேயே இந்துமதிக்கும், ஜீவாக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. குழந்தையை மீட்டு தாருங்கள் என ஜீவாவிடம் இந்துமதி பலமுறை வற்புறுத்தி வந்தார்.
இதனால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் விரக்தியடைந்த இந்துமதி இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து குழந்தை மீட்கப்பட்டு இந்துமதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஜீவா, பப்பி, மணிகண்டன் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.