
மேலும் இவர் ஏற்கனவே இரண்டு கானா ஆல்பம் சாங் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் ரயில் நிலையம் அருகில் தனது நண்பர்களுடன் கானா ஆல்பம் சாங் எடுக்க சென்று அங்குள்ள தண்டவாள பகுதியில் செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதைக்கண்ட அங்கிருந்த சக நண்பர்கள் அலறியடித்துக் கொண்டு அவரை பிடித்து கத்தி கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த மேல்பட்டி ரயில்வே போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரயிலில் அடிபட்டு இறந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கானா ஆல்பம் எடுக்க செல்பி எடுத்துக் கொண்டிருந்த வசந்தகுமார் நேற்று முன்தினம் பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் நேற்று மாலை ரயில் மோதி பலியாகி பிறந்த நாளாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : “உயிரே போனாலும் நடத்திக்காட்டுவோம்..!” ஸ்டாலின் அரசுக்கு மதுரை ஆதீனம் சவால்..!