தமிழகத்தில் ஆபாச படங்களை பரப்பிய வடமாநில வாலிபர்..! போக்சோவில் அதிரடி கைது..!

Published : Mar 04, 2020, 12:21 PM ISTUpdated : Mar 04, 2020, 12:23 PM IST
தமிழகத்தில் ஆபாச படங்களை பரப்பிய வடமாநில வாலிபர்..! போக்சோவில் அதிரடி கைது..!

சுருக்கம்

திருப்பூர் அருகே ஆபாச படங்களை பரப்பியதாக ஜார்க்கண்ட் வாலிபர் ஒருவர் கைதாகி இருக்கிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். இங்கிருக்கும் ஒரு பனியன் கம்பெனியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா குமார்ஷா (28) என்பவர் பணியாற்றுகிறார். இதற்காக திருப்பூர் அடுத்த ஊத்துக்குளி அருகே இருக்கும் பூசாரி பாளையத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்தநிலையில் இவர் சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆபாச படங்களை தரவிறக்கம் செய்து பரப்புவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் மூலமாக அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். அதில் அவர் ஆபாச படங்களை பரப்புவது உறுதியானதை அடுத்து திருப்பூர் போலீசார் ஜிதேந்திரா குமார்ஷாவை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடற்கரை ஓரத்தில் காரில் வைத்து சிறுமிக்கு நடந்த கொடூரம்..! மாறி மாறி கற்பழித்த நண்பர்கள்..!

தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் சம்பந்தமான படங்களை தேடி, தரவிறக்கம் செய்வதாகவும் சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த மத்திய உள்துறை அமைச்சகம், அதை தமிழக காவல்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவலர்கள் நடவடிக்கையில் இறங்கினர். தமிழகத்தின் திருச்சி,கோவை,சென்னை, கரூர் உட்பட பலநகரங்களில் இருந்து ஏரளாமானோர் அதிரடியாக கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமிகள் ஆபாச படத்தை அசால்ட்டாக பரப்பிய வாலிபர்..! அலேக்காக தூக்கி கம்பி எண்ண வைத்த காவல்துறை..!

PREV
click me!

Recommended Stories

காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்
இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!