கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கை என்ஐஏக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக 2 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கோவையில் வெடி பொருள் பறிமுதல்
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று அதிகாலை திடீரென காரில் இருந்து சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் கார் முழுவதும் பற்றி எரிந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது விபத்தா அல்லது சதி செயலா என போலீசார் விசாரணை மெற்கொண்ட நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் ஆணி, பால்ராஸ் குண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்ட விசாரணையில் இறந்தது ஜமேசா முபின் என தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடிபொருட்களுக்கு தேவையான பொட்டாட்சியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மர்ம பொருள் என்ன..?
இதனையடுத்து தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஞாயிற்று கிழமை அதிகாலை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் உயிரிழந்தார். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இதே போல சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம பொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஐஏக்கு மாற்ற திட்டம்
இந்தநிலையில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் என்ஐஏ அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு கோவையில் முகாமிட்டுள்ளது. இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்துறைச் செயலர் இரண்டு நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் 2 பேர் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க..