Viral Video : ஒரே ஒரு சின்ன பலூன்..மொத்த ஆட்டோவும் க்ளோஸ் !! அச்சச்சோ.. வைரலாகும் வீடியோ !!

Published : Mar 21, 2022, 11:04 AM IST
Viral Video : ஒரே ஒரு சின்ன பலூன்..மொத்த ஆட்டோவும் க்ளோஸ் !! அச்சச்சோ.. வைரலாகும் வீடியோ !!

சுருக்கம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாக்பத்தில் இளைஞர்கள் சிலர் தண்ணீர் நிரப்பிய பலூன்களை வீசியதால் வேகமாக வந்த ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். 

ஹோலி பண்டிகை :

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாக்பத் நகரில் ஹோலிப் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வண்ணப் பொடிகளை தூவியும், பல வண்ணங்களிலான தன்ணீர் நிரப்பிய பலூன்களை ஒருவர் மீது ஒருவர் வீசியும் உள்ளூர் மக்கள் ஹோலிப் பண்டிகையை கொண்டாடினர். இதன் ஒரு கட்டமாக இளைஞர்கள் சிலர் சாலையில் வரும் வாகனங்கள் மீது தண்ணீர் பலூன்களை வீசத் துவங்கினர்.

ஆட்டோ கவிழ்ந்து விபத்து :

வாகன ஓட்டிகள் திடீரென வீசப்படும் பலூன்களால் அதிர்ச்சியாகி, நிலைதடுமாறி அதன் பின் சாலையில் பயணித்தனர். வேகமாக வந்த ஒரு ஆட்டோவின் மீதும் இளைஞர்கள் தண்ணீர் பலூன்களை வீச, நிலைதடுமாறிய அந்த ஆட்டோ கவிழ்ந்தது. திடீரென சாலையில் கையில் ஒரு பொருளோடு வருவதை பார்த்து ஓட்டுநர் பயந்து ஆட்டோவை திருப்ப, அது நிலைதடுமாறி கவிழ்ந்தது. 

வைரல் வீடியோ :

இச்சம்பவத்தில் ஆட்டோ ஒட்டுநர் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். ஆட்டோ கவிழ்ந்ததை பார்த்ததும் பலூன் வீசிய இளைஞர்கள் தப்பியோடி விட்டனர். இந்த முழுச் சம்பவமும் வீடியோவாக பதிவாகி சமூக வலைதலங்களில் பரவத் துவங்கியது. பல்வெறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!