சென்னையில் பயங்கரம்... கள்ளக்காதலை தட்டிக்கேட்ட நபர்.. கொடூரமாக குத்திக்கொலை..!

Published : Mar 27, 2021, 05:01 PM IST
சென்னையில் பயங்கரம்... கள்ளக்காதலை தட்டிக்கேட்ட நபர்.. கொடூரமாக குத்திக்கொலை..!

சுருக்கம்

பல்லாவரம் அருகே அக்கா கணவரின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட நபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லாவரம் அருகே அக்கா கணவரின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட நபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் நேரு நகர் கண்ணகி தெருவில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாயேஸ் அலி (25) தனது மனைவி மற்றும் கை குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மற்றொரு கட்டிட தொழிலாளி ஆதிமூலம் (44), அவரது மனைவி அமுதா மற்றும் மகன் நித்திஸ் என்கிற அப்பு ஆகியோருடன் அதே வீட்டின் மற்றொரு பகுதியில் வசித்து வந்தனர். 

பாயேஸ் அலியின் அக்கா கணவர் அஜிஜூஸ் அடிக்கடி அவரின் வீட்டிற்கு வந்து சென்றதில் அருகில் வசித்து வந்த அமுதாவுடன் கள்ளதொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த பாயேஸ் அலி 2 நாட்களுக்கு முன்னர் அமுதா மற்றும் அவரது கணவரிடம் தட்டி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து இன்று மீண்டும் இருவரின் குடும்பத்தினருக்கிடையே தாகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஆதிமூலம், அமுதா மற்றும் மகன் நித்திஸ் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாயேஸ் அலியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாயேஸ் அலியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து ஆதிமூலம் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரனை நடைபெற்று வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்
இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!