மாமியாரை மடக்கிய மருமகன்.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை.. விதவையான 9 மாத கர்ப்பிணி மகள்.!

By vinoth kumar  |  First Published Nov 1, 2021, 11:49 AM IST

எனக்கு திருமணமாகி நான் வேப்பூரில் வசித்து வந்தேன். எனது கணவர் ரவிச்சந்திரன் லாரி ஓட்டுநர் என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்றுவிடுவார். எனது வீட்டுக்கு வேல்முருகன் அடிக்கடி வந்து செல்வார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். 


கள்ளக்காதல் விவகாரத்தில் மருமகனை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய மாமியாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் வேல்முருகன்(27). இவருக்கும் வேப்பூர் கிராமத்தை சேர்ந்த அவரது அக்கா மகள் பவித்ரா என்பவருக்கும்  கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பவித்ரா தற்போது 9 மாத கர்ப்பணியாக உள்ளார். பவித்ரா பிரசவத்திற்காக வேப்பூரிலுள்ள தனது அம்மா வீட்டில் தங்கியுள்ளார்.

Tap to resize

Latest Videos

கடந்த 28ம் தேதி இரவு வேல்முருகன் தனது மனைவியை பார்ப்பதற்காக வேப்பூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவியை பார்த்துவிட்டு இரவு அங்கேயே தங்கினார்.  பார்ப்பதற்காக வேப்பூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவியை பார்த்துவிட்டு இரவு அங்கேயே தங்கினார். இந்நிலையில், வேல்முருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த வேல்முருகனின் தாய் மலர்கொடி தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் வேல்முருகன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வேல்முருகனின் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் குமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வேல்முருகனை கழுத்தை நெரித்து குமுதா கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, குமுதா கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீசாரிடம் குமுதா அளித்த வாக்குமூலத்தில்:- எனது தந்தைக்கு 2 மனைவிகள் அதில் முதல் மனைவிக்கு பிறந்தவள் நான். 2-வது மனைவிக்கு பிறந்தவர் தான் வேல்முருகன். எனக்கு திருமணமாகி நான் வேப்பூரில் வசித்து வந்தேன். எனது கணவர் ரவிச்சந்திரன் லாரி ஓட்டுநர் என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்றுவிடுவார். எனது வீட்டுக்கு வேல்முருகன் அடிக்கடி வந்து செல்வார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். அக்காள், தம்பி உறவு என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இந்நிலையில் சிங்கபூரில் வேலை கிடைத்து வேல்முருகன் அங்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து வேல்முருகனுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டால் எங்களது தொடர்பு பாதிக்கப்படும் என்பதால் எனது மகள் பவித்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வேல்முருகன் கூறினார்.

இதையடுத்து வேல்முருகனுக்கு எனது மகளை திருமணம் செய்து வைத்தேன். திருமணத்துக்கு பின்பும் நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்தோம். எனது மகள் பவித்ரா பிரசவத்துக்காக எனது வீட்டுக்கு வந்திருந்தாள். சம்பவத்தன்று அவளை பார்ப்பதற்காக வேல்முருகன் மதுபோதையில் எனது வீட்டிற்கு வந்தார்.இரவு உணவு சாப்பிட்டு விட்டு எனது மகளும் வேல்முருகனும் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தனர். நான் மற்றொரு அறையில் படுத்திருந்தேன்.

நள்ளிரவில் எனது அறைக்கு வந்த வேல்முருகன் என்னை உல்லாசத்துக்கு அழைத்தார். மகள் பக்கத்து அறையில் தூங்குவதால் அவர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என கூறினேன். ஆனால் வேல்முருகன் என்னை வற்புறுத்தி உல்லாசத்தில் ஈடுபட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த நான் வேல்முருகனின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நான் வேல்முருகன் நாடகமாடினேன் என தெரிவித்தார். மருமகனையை மாமியார் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!