அம்மா யார்கிட்ட போனா..? துப்புக்கொடுக்க முடியாத மகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை..!

Published : Nov 01, 2021, 11:33 AM ISTUpdated : Nov 01, 2021, 11:35 AM IST
அம்மா யார்கிட்ட போனா..? துப்புக்கொடுக்க முடியாத மகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை..!

சுருக்கம்

வில்லிவாக்கத்தில் தனது தாயாரைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறியதால், தனது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.  

வில்லிவாக்கத்தில் தனது தாயாரைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறியதால், தனது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 34, செவிலியரான லாவண்யா, 30, என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராதாகிருஷ்ணன் தனது மனைவி மீது சந்தேகம் கொண்டதால், அவருக்கு திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத் தாங்க முடியாமல், அவரை விட்டு விலகி, கடந்த மூன்று மாதங்களாக தன் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழத் தொடங்கினார் லாவண்யா.

ராதாகிருஷ்ணன் தனது மனைவியை சமரசம் செய்ய அணுகியதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சனிக்கிழமை இரவு, அவர் தனது குழந்தைகளை விட்டுவிட்டு இரவு பணிக்காக மருத்துவமனைக்குச் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களுக்குப் பிறகு, ராதாகிருஷ்ணன் லாவண்யாவை சந்திக்க வீட்டிற்குச் சென்றுள்ளான். ஆனால் குழந்தைகள் மட்டும் தனியாக இருப்பதைக் கண்டார்.

அவர் தனது எட்டு வயது மகளிடம் மனைவியை பற்றி தகாத கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். ஆனால் குழந்தை ஒன்றும் புரியவில்லை. தான் இல்லாத நேரத்தில் யாரேனும் தன் தாயை சந்திக்க வீட்டிற்கு வருகிறார்களா? அப்படி வந்தால் என்னிடம் சொல்ல வேண்டும் என தன்னிடம் சொல்லும்படி மகளிடம் வற்புறுத்தி வந்தான்.

குழந்தை இது எதற்கும் பதிலளிக்கத் தவறியதால், அவர் சமையலறைக்குச் சென்று கத்தியை எடுத்து மகளின் தோள்பட்டை மற்றும் கைகளில் குத்தியதாகக் கூறப்படுகிறது. வலி தாங்க முடியாமல் குழந்தை சத்தமாக அழ ஆரம்பித்தது. ராதாகிருஷ்ணன் அவளை அமைதியாக இருக்கச் சொல்லி மிரட்டினான். ஆனால் குழந்தை வலியில் துடித்தது. சில நொடிகளில் குழந்தையின் கழுத்தை அறுத்தான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு ஓடி வந்தனர். அக்கம் பக்கத்தினரை கவனித்த ராதாகிருஷ்ணன் தப்பியோடினார்.

மகளின் உடல் நிலை குறித்து அக்கம் பக்கத்தினர் லாவண்யாவிடம் தெரிவித்தனர். உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கொலையை ஒப்புக்கொண்ட ராதாகிருஷ்ணன் வில்லிவாக்கம் போலீசில் சரணடைந்தார்.

இதையும் படியுங்கள்:- 
சமீப நாட்களாக தனது மனைவியின் நடத்தையில் அதிருப்தி அடைந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். குழந்தை தனது எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கத் தவறியதால் அவர் விரக்தியடைந்தார். "அவர் இல்லாத நேரத்தில் யாராவது வீட்டிற்குச் செல்கிறார்களா என்பதை அறிய மகளிடம் கேட்டதாகவும் குழந்தையால் அவருக்கு துப்பு கொடுக்க முடியவில்லை" என்று விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார். சிறுமி தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

ராதாகிருஷ்ணன் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!