ஒரே தூர்நாற்றம்.. வீட்டை திறந்து பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி..!

Published : Oct 31, 2021, 08:40 PM IST
ஒரே தூர்நாற்றம்.. வீட்டை திறந்து பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி..!

சுருக்கம்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை மண்ணூர்பேட்டை சிடிஎச் சாலையில் வசிப்பவர் ரிஜேஸ்(43). இவர் காய்கறி வியாபாரி.  இவர் கேரளாவை சேர்ந்தவர். இவருக்கும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில்  பணியாற்றி வரும் திருவண்ணாமலையை சேர்ந்த ஜானகி (39) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பூட்டிய வீட்டில் கள்ளக்காதலி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது கள்ளக்காதலன் தலைமறைவாகியுள்ளார். 

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை மண்ணூர்பேட்டை சிடிஎச் சாலையில் வசிப்பவர் ரிஜேஸ்(43). இவர் காய்கறி வியாபாரி.  இவர் கேரளாவை சேர்ந்தவர். இவருக்கும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில்  பணியாற்றி வரும் திருவண்ணாமலையை சேர்ந்த ஜானகி (39) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- நாங்கள் உல்லாசமாக இருப்பதை உன்னால் தடுக்க முடியாது.. கூலிப்படையை வச்சு போட்டு தள்ளிடுவேன்.. மனைவி மிரட்டல்.!

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, கடந்த 4 மாதமாக மேற்கண்ட முகவரியில் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இங்கிருந்து ஜானகி வேலைக்கும் ரிஜேஸ் வியாபாரத்துக்கு சென்று வந்துள்ளார். 

இதையும் படிங்க;- ப்ளீஸ்.. என்னோட பொண்டாட்டிய விட்டுடுங்க.. சாமி கும்பிட சென்ற பெண்ணை லாட்ஜில் வைத்து கதற கதற பலாத்காரம்..!

இந்நிலையில், ரிஜேஸ் வசித்துவந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம்  வீசியதால் வீட்டின் உரிமையாளர் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது, ஜானகியின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ஜானகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- கட்டிலில் கட்டிபுரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்.!

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஜானகியை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு ரிஜேஸ் தப்பி சென்றாரா, குடும்ப பிரச்சனையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரிஜேஸை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!