
திருமணம் செய்யுமாறு டார்ச்சர் செய்ததால், ஆற்று தண்ணீரில் மூழ்கடித்து இளம்பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
தேனி அருகே கூழையனூர் முல்லை ஆற்றில் கடந்த 17ம் தேதி அடையாளம் தெரியாத பெண் சடலம் மிதப்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஆற்றில் மிதந்து வந்த பெண், தேனி அருகே தாடிச்சேரியை சேர்ந்த முருகேசன் மனைவி முருகேஸ்வரி (29) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. ஆனால் கருத்து வேறுபாட்டால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.
மேலும் தேனி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது இவருக்கும், தேனி அருகே பாலார்பட்டியை சேர்ந்த ராஜதுரைக்கும் (22) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜதுரையிடம் ஓயாமல் முருகேஸ்வரி டார்ச்சர் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், தொல்லை தாங்கா முடியாத ராஜதுரை கொலை செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து வீரபாண்டியில் நடந்த கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கு சாமி கும்பிட்ட பின்னர் அங்கிருந்து கூழையனூர் முல்லை ஆற்றுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் இருவரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது தெரியவந்தது. கொலை செய்த ராஜதுரையை வீரபாண்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.