திருப்பதியில் மனைவியை கொன்று சூட்கேசில் வைத்து ஆற்றில் வீசிய கணவன்...! 5 மாதங்களுக்கு பிறகு கைது செய்த போலீஸ்

By Ajmal KhanFirst Published Jun 1, 2022, 11:12 AM IST
Highlights

மனைவியை கட்டையால் தாக்கி கொலை செய்து உடலை ஆற்றில் வீசிய கணவனை 5 மாதங்களுக்கு பிறகு திருப்பதி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவன்-மனைவியை இடையே பிரச்சனை

ஆந்திர மாநிலம் கொர்லகுண்டாவை சேர்ந்தவர் பத்மா, இவர் ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் மென் பொருள் பொறியாளராக பணியாற்றும் வேணுகோபால் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து சில மாதங்கள் சந்தோஷமாக இருந்த  இருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவர் மீது பத்மா புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து இரு வீட்டாரும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை சமரசம் செய்து வைத்துள்ளனர். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் இருந்த பத்மா காணாமல் போய் விட்டதாக வேணுகோபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.சுமார் 5 மாதங்களாக பத்மா தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காத காரணத்தால் தனது மருமகன் மீது சந்தேகம் இருப்பதாக பத்மாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். 


மனைவியை கொலை செய்த கணவன்

இதனையடுத்து வேணுகோபாலை பிடித்து போலீசார் விசாரித்த போது பத்மாவை கொலை செய்து ஏரியில் வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார்.  ஏரியில் இருந்து பத்மாவின் உடலை மீட் போலீசார் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் நடைபெற்றது எப்படி என்பது தொடர்பாக தகவல் தெரிவித்த   துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி கிருஷ்ணா, “பத்மாவின் கணவர் மற்றும் அவரது  மாமியார் கூடுதல் வரதட்சணை கேட்டு உடல் மற்றும் மன ரீதியாக பத்மாவை  துன்புறுத்தியுள்ளனர். வேணுகோபால், பத்மாவுக்கு விவாகரத்து நோட்டீசும் அனுப்பியிருந்தார், அதை பத்மா ஏற்க மறுத்துள்ளார். "இதனையடுத்து  பத்மாவை கொலை செய்ய அவரது  கணவர் மற்றும் மாமியார் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஜனவரி 5 ஆம் தேதி, பத்மாவை  நான்கு பேர் சேர்ந்து கட்டைகளால் அடித்துக் கொன்றுள்ளனர். இதனையடுத்து  சடலத்தை போர்வையில் போர்த்தி, சூட்கேசில் அடைத்து வெங்கடாபுரத்தில் உள்ள ஏரியில் வீசியதாக துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி கிருஷ்ணா தெரிவித்தார். பத்மா கொலை வழக்கில் அவரது கணவர் வேணுகோபால், அவரது நண்பர் சந்தோஷ் மற்றும் வேணுகோபாலின் குடும்பத்தினரை போலீசார் ரிமாண்ட் செய்துள்ளனர். மனைவியை கொலை செய்து விட்டு  காணமல் போனாதாக நாடகமாடியவரை போலீசார் 5 மாதங்களுக்கு பிறகு கைது செய்த  சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

காதலை ஏற்க மறுப்பு.. எக்ஸாம் எழுதிவிட்டு திரும்பிய 11ம் வகுப்பு மாணவிக்கு 10 இடங்களில் சரமாரி கத்தி குத்து.!

 

 

click me!