வெளியூரில் கணவன்.. கதவை சாத்திக் கொண்டு கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. தாலிகட்ட வைத்த ஊர்மக்கள்.

Published : May 31, 2022, 06:48 PM IST
வெளியூரில் கணவன்.. கதவை சாத்திக் கொண்டு கள்ளக் காதலனுடன் உல்லாசம்..  தாலிகட்ட வைத்த ஊர்மக்கள்.

சுருக்கம்

கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த ஜோடியை கிராம மக்கள் பிடித்து திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வெளியூர் சென்றிருந்த நிலையில் கள்ளக்காதலுடன் மனைவி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில் ஊர் மக்கள் அவர்கள் இவ்வாறு தண்டித்துள்ளனர்.  

கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த ஜோடியை கிராம மக்கள் பிடித்து திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வெளியூர் சென்றிருந்த நிலையில் கள்ளக்காதலுடன் மனைவி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில் ஊர் மக்கள் அவர்கள் இவ்வாறு தண்டித்துள்ளனர்.

கள்ள காதல் மற்றும் அதனால் ஏற்படும் கொலை, தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே நேரத்தில் கள்ளக்காதலில் ஈடுபடும்  ஜோடிகளை பிடித்து ஆங்காங்கே கிராம மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து வெளுக்கும் சம்பவங்களும் ஒரு சில இடங்களில் நடந்து வருகிறது. இப்படி ஒரு சம்பவம் பீகார் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ஷிக்கர் பூர்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுகெளலி  கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீலா தேவி, திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவர் மும்பையில் டாக்ஸி டிரைவராக இருந்து வருகிறார். அவர் குடும்பத்திற்காக அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் அந்த மனைவி சுசீலா தேவி தனது குழந்தைகளுடன்  சொந்த கிராமத்தில் வசித்து வந்தார்.

கணவனை பிரிந்திருந்த நிலையில் லெளகாரியா  கிராமத்தில் வசிக்கும் வினோத் ராம் (26) என்று இளைஞருடன் சுசீலா தேவிக்கு அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். கடந்த ஆறு மாதமாக அவர்கள்  திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தனர். கள்ளக் காதலன் வினோத் ராம் செல்போன் கடை நடத்தி வருகிறார், இந்நிலையில் கடந்த வியாழன் இரவு அந்த இளைஞன் சுகெளலி  கிராமத்தில் உள்ள தனது காதலி சுசீலா தேவியில் வீட்டிற்கு  வந்தார். இருவரும் வீட்டின் கதவை மூடிக் கொண்டனர். இதை கிராம மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை, கணவன் வெளியூரில் இருக்கும் போது வேறொரு இளைஞர் வீட்டிற்குள் நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்தார் கிராம மக்கள், அந்தப் பெண்ணையும் இளைஞனையும் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.

ஆத்திரமடைந்த கிராம மக்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இரவு முழுவதும் இருவரின் கைகளும் துணியால் கட்டி வைத்தனர். பொழுது விடிந்ததும் அந்த இளைஞன் குடும்பத்தினர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த  இளைஞன் கள்ளக்காதலுக்கு கிராம மக்கள் முன்னிலையில் தாலி கட்டினார். இருவரும் கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால்  ஏற்கனவே சுசிலா தேவிக்கும் முத்துராம் இருவருக்கும் திருமணம் நடந்து இருவருக்கும் குழந்தைகள்  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கொலைக்கான பின்னணி.. எதிர்பாராத ட்விஸ்ட்.. போலீஸ் அதிர்ச்சி.!
முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?