நினைத்த போதெல்லாம் கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. தடையாக இருந்த கணவன் துடிக்க துடிக்க கழுத்து அறுத்து கொலை.

By Ezhilarasan BabuFirst Published May 31, 2022, 6:03 PM IST
Highlights

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் மனைவி மற்றும் கள்ளக்காதலனை ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் திருமணத்திற்கு புறம்பான உறவு அதனால் கணவனை மனைவி கொலை செய்வது அல்லது கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி  கணவனை கொல்வது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக் காதலி திட்டமிட்டு கொலை செய்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம்த்தில் இந்த குற்றம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், கொலுகொண்டா  மண்டலத்தில் உள்ள பகலபாடு கிராமத்தை சேர்ந்தவர் ருத்தலா சத்தி பாபு, இவருக்கு ராஜலட்சுமி என்ற பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சப்பவரபு  எரி நாயுடு என்பவருடன் ராஜலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவனுக்கு மனைவியின் கள்ளக்காதல் விவரம் தெரிந்தது. இதனால் சத்தி பாபு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார், இதில் விரக்தியடைந்த மனைவி நமது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவனை தீர்த்துக் கட்டுமாறு கள்ளக்காதலன் எரி நாயுடுவிடம் கூறினாள், எனவே சத்திபாபுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்த எரிநாயுடு இதற்காக கர்ரி  கிருஷ்ணா என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கொலை செய்ய ஒப்பந்தம் செய்தார்.  சக்தி பாபுவை கொலை செய்ய களமிறங்கிய ஏறிய நாயுடு  சீட்டு ஆடும் பழக்கம் கொண்ட சத்தி பாபுவை ஆகஸ்டு 7ஆம் தேதி போன் செய்து மகவரபாலத்தில்  தாம் சீட்டாட்டம் விளையாட போவதாகவும் கூறி உடன் வருமாறு அழைத்தார், கர்ரி கிருஷ்ணா எரி நாயுடு ஒரு பைக்கிலும், சக்தி பாபு தனது  மொபட்டிலும்  மகவரபாலம் நோக்கி சென்றனர்.

வழியில் நடுவே அதிகாரம் பேட்டையில் சத்தி பாபுவுடன் சேர்ந்து மது அருந்தினர், அதில் சக்தி பாபுவுக்கு போதை தலைக்கு ஏறியது, அப்போது சத்திபாபுவின் கால்களை பிடித்து அருகில் உள்ள தோட்டத்திற்கு இழுத்துச் சென்ற இருவரும், அங்கு சத்தி பாபுவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் சடலத்தை ஏலேறு  கால்வாயில் வீசினர் அவரின் மொபட்டை பள்ளத்தில் தள்ளி விடப்பட்டனர். இந்நிலையில் சத்தி பாபு காணாமல் போனது குறித்து சத்தி பாபுவின் தந்தை மற்றும் அவரது தாய் போலீசில் புகார் செய்தனர், தங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை என அவர்கள் கூறியதால், இந்த வழக்கு விசாரணை செய்வதில் தொய்வு இருந்து வந்தது. ஆனால் ஆகஸ்ட் 19ம் தேதி சத்தி பாபுவின் மனைவி ராஜலட்சுமிக்கும் எரிநாயுடுவுக்கும் இடையே திருமணத்துக்கு புறம்பான தொடர்பு இருப்பதை அறிந்த சந்திபாபுவின் தந்தை அது குறித்து கோல்கொண்டா போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் சக்தி பாபு மனைவியிடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலன் தீர்த்துக் கொட்டியதாக கூறினார். இதை கேட்டு போலீசார் அதிருச்சி அடைந்தனர். இதனையடுத்து ராஜகலட்சுமி கொடுத்த தகவலின்படி  போலீசார் கள்ளக்காதலன் மற்றும் கொலை செய்த கிருஷ்ணா உள்ளிட்டோரை கைது செய்தனர். 

 

click me!