கணவனுடன் ஓயாத உல்லாசம்.. கள்ளக்காதலியை கூலிப்படை ஏவி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி.!

Published : May 31, 2022, 11:39 AM IST
கணவனுடன் ஓயாத உல்லாசம்.. கள்ளக்காதலியை கூலிப்படை ஏவி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி.!

சுருக்கம்

இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காயத்திரி பாதிக்கப்பட்ட பெண்ணை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

கணவனுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் பெண்ணை கூலிப்படை ஏவி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கோண்டாப்பூரை சேந்தவர் காயத்திரி. இவரது கணவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். அப்போது, இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காயத்திரி பாதிக்கப்பட்ட பெண்ணை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

அப்போது தனது கணவருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது காயத்திரிக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து காயத்திரி ஏப்ரல் 24-ம் தேதி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் காயத்திரி சமாதானம் அடையவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணை பழிவாங்க கூலிப்படையை அணுகி, அவர்களை அழைத்து வந்து ஒரு அறையில் தங்கவைத்துள்ளார். அப்போது, சைநாக பேசி வீட்டுக்கு வரவழைத்து கூலிப்படையினர் அவரை தாக்கியுள்ளனர். 

அதன் பின்னர் கூலிப்படையினர் அந்த பெண்ணை துணியால் வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை காயத்திரி தனது செல்போன் மூலம் பதிவு செய்துள்ளார். கூலிப்படையினர் தாக்கியதில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து காயத்திரி மற்றும் 4 இளைஞர்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!